70 பள்ளிகளுக்குப் புதிய முதல்வர் நியமனம்

மாதங்கி இளங்­கோ­வன்

கல்வி அமைச்­சின் வரு­டாந்­தி­ரப் பணி­யிட மாற்று நட­வ­டிக்­கை­யின் ஓர் அங்­க­மாக அடுத்த ஆண்டு 70 பள்­ளி­க­ளுக்­குப் புதிய முதல்­வர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வார்­கள். இந்­தப் பட்­டி­ய­லில் முதல்­மு­றை­யாக 26 பேர் பள்ளி முதல்­வ­ரா­கப் பொறுப்­பேற்­க­ உள்­ள­னர் என்­ப­தும் கல்வி அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

வரும் டிசம்­பர் மாதம் 29ஆம் தேதி­யன்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொள்­ளும் விழா­வில் புதிய பள்ளி முதல்­வர்­கள், தங்­க­ளின் நிய­ம­னக் கடி­தங்­க­ளைப் பெறு­வர்.

ஒரு பள்­ளி­யி­லி­ருந்து வேறொரு பள்­ளிக்­குத் தலை­மை­யா­சி­ரி­ய­ராக அனுப்­பு­வ­தன் மூலம் அனு­ப­வம் மிக்க புதிய தலைமை ஆசி­ரி­யர்­களின் சிறந்த செயல்­மு­றை­க­ளை­யும் சிந்­த­னை­க­ளை­யும் கொண்டு நன்மை பெற­லாம் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­தது.

பள்ளி முதல்­வர்­கள், கல்வி அமைச்­சின் தலை­மை­யக அதி­காரி­கள் என மொத்­தம் 44 பேர், புதி­தாக தலை­மை­யா­சி­ரி­யர் பொறுப்பை ஏற்­கி­றார்­கள். பள்­ளி­களில் ஆசி­ரி­யர்­கள், பணி­யா­ளர்­கள், மாண­வர்­கள் ஆகி­யோ­ருக்­குத் தலை­மை­யேற்று, வழி­ந­டத்­திச் செல்­லும் அவர்­க­ளின் திற­மை­மீது கல்வி அமைச்சு கொண்­டுள்ள நம்­பிக்­கையை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக இந்த நிய­ம­னங்­கள் அமைந்­துள்­ளன.

தெக் வாய் உயர்­நி­லைப் பள்­ளி­யில் கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக முதல்­வ­ரா­கப் பணி­யாற்­றிய திரு சிவ­ரா­ஜன், 49, அடுத்த ஆண்டு செங்­காங் உயர்­நி­லைப் பள்­ளி­யின் தலைமை ஆசி­ரி­ய­ரா­கப் பொறுப்­பேற்­பார். கல்­வித் துறை­யில் 25 ஆண்­டு­கால அனு­ப­வ­முள்ள சிவராஜன், "கல்­வித் திட்­டங்­களில் மாற்­றங்­கள் ஏற்­பட்­டுக்­கொண்டே இருக்­கும் இக்­கா­ல­கட்­டத்­தில், மாண­வர்­க­ளின் மன­ந­ல­னைப் பேணிக்­காப்­ப­தற்கு உகந்த திட்­டத்­தை­யும் உரு­வாக்­கு­வது மிக முக்­கி­யம்," என்­றார்.

ஒவ்­வொரு பள்­ளி­யி­லும் பணி­யாற்­றும்­போது புதிய ஆசி­ரி­யர்­களை­யும் மாண­வர்­க­ளை­யும் சந்­தித்து அவர்­க­ளு­டன் உரை­யா­டு­வதை விரும்­பு­கி­றார் சிவ­ரா­ஜன். வேறு பள்­ளிக்­குச் செல்­லும்­போது புதிய சவால்­க­ளைச் சமா­ளிப்­பது தமக்­குப் புத்­து­ணர்ச்­சி­யை­யும் உற்­சாகத்­தை­யும் தரு­வ­தாக அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

சிங்­கப்­பூ­ரின் கல்­வித்­துறை கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக தொழில்­நுட்ப உரு­மாற்­றம் கண்டு வரு­வ­தா­கக் கூறிய அவர், மாண­வர்­க­ளுக்­குத் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தும் கல்­வித் திட்­டங்­களை மட்­டு­மல்­லா­மல் மனி­தர்­களி­டையே சிந்­த­னைப் பரி­மாற்­றம், உரை­யா­டல் ஆகி­ய­வற்­றைத் திட்­டங்­களில் தொடர்ந்து இணைத்­துக் கொள்ள வேண்­டும் என்­றார்.

ஹவ்­காங் உயர்­நி­லைப்­பள்­ளி­யில் தலைமை ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரிந்த திரு அறி­வ­ழ­கன் மாணிக்­கம், அடுத்த ஆண்­டு­மு­தல் நியூ டவுன் உயர்­நி­லைப் பள்­ளி­யில் பொறுப்­பேற்­பார். செம்­ப­வாங் உயர்­நி­லைப்­பள்­ளி­யின் தலைமை ஆசி­ரி­ய­ரான திரு ஜஸ்­வந்த் சிங், புக்­கிட் வியூ உயர்­நி­லைப் பள்­ளி­யில் பணி­பு­ரி­வார். பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்­நி­லைப் பள்­ளித் துணை முதல்­வராக இருந்த திரு அஷ்­ரஃப் ஹய்­தர் யூசோஃப் மணி­யம், அங் மோ கியோ உயர்­நி­லைப் பள்ளி முதல்­வ­ரா­கப் பொறுப்­பேற்­கி­றார்.

புக்­கிட் பாஞ்­சாங் தொடக்­கப்­பள்­ளி­யில் பணி­யாற்­றிய திரு பக்த சீலன், பிரின்­சஸ் எலி­ச­பெத் தொடக்­கப்­பள்­ளி­யில் தலைமை ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரி­ய­வுள்­ளார்.

கல்வி அமைச்­சின் தொழில்­நுட்­பக் கற்­றல் பிரி­வில் இயக்­கு­ந­ராக இருக்­கும் திரு சுராஜ் நாயர் வேணு­கோ­பால், ரோசைத் பள்­ளி­யின் முதல்­வர் பொறுப்பை ஏற்­க­வுள்­ளார்.

இந்­நி­லை­யில் 26 புதிய முதல்­வர்­க­ளின் நிய­ம­னம், அவர்­க­ளது வாழ்க்­கைத்­தொ­ழி­லின் முக்­கிய மைல்­கல்­லாக அமை­யும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­தது.

இதற்­கி­டையே, வேலை­யில் இருந்து ஓய்­வு­பெ­றும் ஏழு தலைமை ஆசி­ரி­யர்­க­ளை­யும் கல்வி அமைச்­சின் தலை­மை­ய­கத்­தில் பணி­பு­ரிந்த மூத்த கல்வி அதி­கா­ரி­க­ளை­யும் டிசம்­பர் நடை­பெ­றும் விழா­வில் கல்வி அமைச்சு அங்­கீ­க­ரிக்­கும்.

mathangielan@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!