தொடக்கப்பள்ளி மாணவர்கள் 1,000 பேர் ரிசோர்ட்ஸ் வோர்ல்டில் குதூகலம்

சிறு­வர் தினக் கொண்­டாட்ட உணர்வு, இவ்­வாண்டு 1,000 தொடக்­கப்­பள்ளி மாண­வர்­க­ளுக்கு முன்­ன­தா­கவே வந்­து­விட்­டது. இவர்­கள் நேற்று ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்­தோசா கொண்­டாட்­டங்­களில் கலந்­து­கொண்டு மகிழ்ந்­த­னர்.

அதி­லும் யுனி­வர்­சல் ஸ்டு­டி­யோ­ஸுக்­குச் செல்­லும் வாய்ப்­பும் கிட்­டவே, பழம் நழு­விப் பாலில் விழுந்­தது­போல் ஆயிற்று. ஆண்­டு­தோ­றும் சமூக அள­வில் நிதி திரட்­டும் அமைப்­பான 'சில்­ரன் ஃபார் சில்­ரன்' (சிஎ­ஃப்சி) என்ற அமைப்­பின் முயற்­சி­யால் இது சாத்­தி­ய­மா­னது.

சிஎ­ஃப்சி அமைப்பு 2008ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­ட­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரில் சுற்­றிப்­பார்ப்­ப­தற்கு அரிய இடங்­க­ளுக்­குக் குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஏறக்­கு­றைய 13,000 சிறார்­களை அது அழைத்­துச் சென்று மகிழ்­வித்­துள்­ளது. அவற்­றில் சிங்­கப்­பூர் ஃபிளையர் எனப்­படும் சிங்­கப்­பூர் ராட்­டி­னம், சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டம் போன்­ற­வை­ அடங்­கும்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் கார­ண­மாக கடந்த இரண்டு ஆண்டு­க­ளாக மெய்­நி­கர் வாயி­லான நிகழ்ச்­சி­களை மட்­டுமே நடத்தி­வந்த அமைப்பு, இந்த ஆண்டு மீண்­டும் சிறார்­களை நேரடி­யாக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­து­வ­தில் இறங்­கி­யுள்­ளது. இவ்­வ­ளவு பெரிய சிறார் கூட்­டம் மீண்­டும் நேரடி நிகழ்ச்­சி­களில் ஈடு­ப­டு­வது தமக்கு மகிழ்ச்­சி­ய­ளிப்­ப­தாக பிஸ்­னஸ் டைம்ஸ் நாளி­த­ழின் ஆசி­ரி­யர் வோங் வெய் கோங் கூறினார்.

"இந்த நிகழ்ச்­சி­யின் மூலம் இந்­தச் சிறு­வர்­கள் மகிழ்ச்­சி­யில் திளைப்­ப­தைப் பார்ப்­பது சமூ­கத்­தில் வச­தி­கு­றைந்­தோ­ருக்கு நாம் தொடர்ந்து சேவை­யாற்ற வேண்­டும் என்­பதை நமக்கு வலி­யு­றுத்தி நினை­வூட்­டு­கிறது," என்று திரு வோங் சொன்­னார்.

இந்த நிகழ்ச்­சிக்கு 'த ரைஸ் கம்­பெனி' என்ற லாப­நோக்­க­மற்ற அமைப்பு, சிஎச்­ஐஜே கெல்­லாக் பள்ளி, பிஸ்­னஸ் டைம்ஸ் செய்­தித்­தாள் ஆகி­யவை ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்­தோ­சா­வின் ஆத­ர­வு­டன் ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

இதில் பிஸ்­னஸ் டைம்­சின் 'படிங் ஆர்­டிஸ்ட்ஸ் ஃபண்ட்' என்ற வளர்ந்து­வ­ரும் கலை­ஞர் நிதி­யத்­துக்கு சிஎ­ஃப்சி அமைப்பு நிதி திரட்­டித் தந்து உத­வி­யது. கலை­களில் திறன்வாய்ந்த, ஆனால் வசதி­கு­றைந்த குடும்­பங்­களில் உள்ள, இளை­யர் மற்­றும் சிறார்­களுக்­காக இவ்­வாண்டு சிஎ­ஃப்சி அமைப்பு $233,000 திரட்­டி­யது.

இதன் மூலம் பய­ன­டைந்த மாணவி கிறிஸ்­டல் யாப், இந்த நிதி­யம் தமது நாட்­டி­யத் திறனை வளர்க்க உத­வி­ய­தா­கக் கூறு­கி­றார்.

இந்த 17 வயது மாண­வி­யும் மற்ற மாண­வி­ய­ரு­மாக 10 பேர் சேர்ந்து ஒரு குழு­வாக நட­ன­மா­டி சிறப்பு விருந்­தி­ன­ராக வந்­தி­ருந்த கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங்கை மகிழ்­வித்­த­னர்.

"குறைந்த நேர நிகழ்ச்­சி­யா­கட்­டும், நேரலை நிகழ்ச்­சி­யா­கட்­டும் அல்­லது ஒரு நல்ல நோக்­கத்­துக்­கான நிகழ்ச்­சி­க­ளா­கட்­டும், இந்த நிதி­யம் தரும் ஆத­ர­வால் எனது திற­மை­யைக் காட்ட எனக்குப் பல வாய்ப்­பு­கள் கிட்­டி­யுள்­ளன," என்று பெரு­மி­தத்­து­டன் கூறு­கி­றார் கிறிஸ்­டல் யாப்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!