மரங்கள் உறிஞ்சக்கூடிய கரியமில வாயு அளவைக் கண்டறியும் தொழில்நுட்பம்

சிங்­கப்­பூ­ரில் உள்ள மரங்­கள் உள்­ளி­ழுக்­கும் கரி­ய­மில வாயு அள­வைக் கண்­ட­றி­வ­தற்கு ஆய்­வா­ளர்­கள் தொழில்­நுட்­பத்தை நாடத் தொடங்­கி­யுள்­ள­னர்.

வான்­வழியான லேசர் ஸ்கே­னர்­கள், வான்­வழியாக எடுக்­கப்­படும் படங்­கள் ஆகி­ய­வற்­றின் உத­வி­யு­டன் இது சாத்­தி­ய­மா­கி­ உள்­ளது.

சிங்­கப்­பூ­ரி­லுள்ள காடு­கள், சதுப்­பு­நி­லங்­கள் தொடர்­பில் திரட்­டப்­படும் இந்த உயர்­தெ­ளி­வுத் தக­வல்­க­ளைக் கொண்டு சிங்­கப்­பூ­ருக்­கென கரி­ய­மில அடர்த்தி பகுப்­பாய்வு வரை­ப­டம் ஒன்று உரு­வாக்­கப்­படும்.

கரி­மம் அதி­க­முள்ள காட்­டுப் பகு­தி­களை அடை­யா­ளம் கண்டு அவற்­றைப் பாது­காக்க, அர­சாங்­கத் துறை மற்­றும் தனி­யார் துறை சார்ந்த அதி­கா­ரி­க­ளுக்கு இந்த வரை­ப­டம் உத­வி­யாக இருக்­கும் என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் (என்­யு­எஸ்) இயற்­கை­சார் பரு­வ­நி­லைத் தீர்­வு­க­ளுக்­கான நிலை­யத்­தின் (சிஎன்­சி­எஸ்) இயக்­கு­நர் பேரா­சி­ரி­யர் கோ லியன் மின் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் கரிம மதிப்­பீட்டு ஆராய்ச்­சி­யைப் புவி­யி­யல் தரவு­களை­யும் தொழில்­நுட்­பங்­களை­யும் கொண்டு மேற்­கொள்­வ­தன் தொடர்­பில் என்­யு­எஸ் மற்­றும் சிங்­கப்­பூர் நில ஆணை­யம் நேற்று ஒப்­பந்­தம் ஒன்­றில் கையெ­ழுத்­திட்­டன.

"ஒரு காடே உள்­ளி­ழுக்­கும் கரிம அளவை மதிப்­பி­டு­வ­தற்கு, பொது­வாக நாம் ஒவ்­வொரு மர­மாக அள­வெ­டுத்­துப் பின்­னர் அந்­தத் தக­வ­லின் அடிப்­ப­டை­யில் மதிப்­பி­டு­வோம்.

"இனி, தொழில்நுட்பத்தின் வழி­யாக அதே அள­வீட்­டைச் செய்­வ­தால் நேர­மும் முயற்­சி­யும் மிச்­ச­மாகும்," என்­றார் பேரா­சிரி­யர் கோ.

மரங்­க­ளுக்­கி­டையே வினா­டிக்­குச் சுமார் ஆயி­ரக்­க­ணக்­கான லேசர் அதிர்­வு­களை வான்­வழி லேசர் ஸ்கே­னர்­கள்­வழி உமிழ்­வ­தன் மூலம் சிங்­கப்­பூ­ரின் நிலத்­தைப் பற்­றிய துல்­லி­ய­மான ஒரு வடி­வத்தை சிங்­கப்­பூர் நில ஆணை­யம் பெறு­கிறது.

இந்­தத் தர­வு­க­ளைக் கொண்டு ஆய்­வா­ளர்­கள் இனி கரி­மத்தை அள­வி­டு­வர் என்று கூறப்­பட்­டது.

துணைக்­கோ­ளப் படங்­களைக் காட்­டி­லும் இப்­பு­திய தொழில்­நுட்­பம் 20 மடங்கு நம்­ப­கத்­தன்மை வாய்ந்­தது என்­றும் கூறப்­பட்­டது.

கடந்த இரண்டு ஆண்­டு­களாக வட்­டா­ரத்­தின் கரிம அளவை மதிப்­பி­ட­வும் கண்­காணிக்­க­வும் சிஎன்­சி­எஸ் எடுத்து­வ­ரும் முயற்­சி­க­ளுக்­குத் துணை­யாக இந்­தத் திட்­டம் அமை­யும் என்று பேரா­சி­ரி­யர் கோ குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!