‘பொதுவான, அனைவரையும் உள்ளடக்கிய வட்டாரத்தை உருவாக்குங்கள்’

புவி­சார் அர­சி­யல் சச்­ச­ர­வு­கள் கொண்ட ஒரு புதிய சகாப்­தத்­துக்­குள் உல­கம் நுழைந்­துள்­ளது. இது மேலும் பொரு­ளி­யல் துண்­டிப்­பு­களை உண்­டாக்­கும்.

இருப்­பி­னும், இந்த வெளிப்­புற சவால்­க­ளுக்கு நாடு­கள் எளி­தில் அடிப்­ப­ணி­யக்­கூ­டாது. மாறாக, இந்த வட்­டா­ரத்­தில் அமை­தி­யும் நிலைத்­தன்­மை­யும் நீடிக்க நாடு­கள் தங்­க­ளால் ஆன அனைத்து முயற்­சி­க­ளை­யும் மேற்­கொள்ள வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் நேற்று தெரி­வித்­தார்்.

மரினா பே சேண்ட்­சில் நடை­பெற்ற எதிர்கால சீனா உல­க­ளா­விய கருத்­த­ரங்­கில் திரு வோங் உரை­யாற்­றி­னார். இக்­க­ருத்­த­ரங்­குக்கு 'கொந்­த­ளிப்­புக்கு மத்­தி­யில் நிலைத்­தன்மை' எனும் கருப்­ பொருள் வைத்­தி­ருப்­பது பொருத்­த­மாக உள்­ளது என்­றார் அவர்.

"புதிய சம­நி­லையை நோக்கி உல­கம் சென்­றுகொண்­டி­ருக்­கும் வேளை­யில் நிச்­ச­ய­மற்ற தன்­மை­கள் தலை­தூக்­கக்­கூ­டும். நாடு­கள் அனைத்­து­லக சட்­டத்­தின்­படி தங்­கள் அடிப்­படை கொள்­கை­களில் உறு­தி­யாக இருக்க வேண்­டும். மற்ற நாடு­க­ளு­டன் பணி­யாற்றி பன்­மு­கத்­தன்­மை­யை­யும் ஒழுங்­கை­யும் நிலை­நாட்ட வேண்­டும்," என்­றார் திரு வோங்.

"இந்த அணு­கு­மு­றை­யைத்­தான் சிங்­கப்­பூர் தனது வெளி­யு­ற­வுக் கொள்­கை­யில், சக ஆசி­யான் நாடு­க­ளு­டன் கடைப்­பி­டித்து வரு­கிறது. அதன் மூலம் ஆசி­யான் நாடு­க­ளுக்­கி­டையே ஒற்­று­மையை வலுப்­ப­டுத்தி, வெளிப்­ப­டை­யான அனைத்­தை­யும் உள்­ள­டக்­கும் தன்­மையை ஏற்­ப­டுத்த முடி­யும்.

"அமெ­ரிக்க-சீன உறவை மேம்­படுத்த சிங்­கப்­பூ­ரும் ஆசி­யா­னும் பெரிய அள­வில் எது­வும் செய்­து­விட முடி­யாது என்­றா­லும் இவ்­வட்­டா­ரத்­தில் வெளிப்­ப­டைத்­தன்­மையை மேம்­ப­டுத்த நம்­மால் ஆன அனைத்­தை­யும் செய்­வோம்," என்­றார் துணைப் பிர­த­மர்.

உல­க­ளா­விய ஒழுங்­கின் எதிர்­கா­லம் அமெ­ரிக்கா, சீனா ஆகி­ய­வற்றை மட்­டும் சார்ந்­தி­ருக்க முடி­யாது என்று கூறிய திரு வோங், உதா­ர­ணத்­துக்கு, இந்­தியா வரும் 2030க்குள் உல­கின் மூன்­றா­வது பெரிய பொரு­ளி­ய­லாக உரு­வாக வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­கிறது," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!