ஹெல்த்தியர் எஸ்ஜி: அரசாங்கம் சுகாதாரப் பரிசோதனைகளுக்கு கட்டணம் செலுத்தும்

புதிய 'ஹெல்த்­தி­யர் எஸ்ஜி' எனும் 'மேலும் ஆரோக்­கி­ய­மான எஸ்ஜி' நோய்த்­த­டுப்­புப் பரா­ம­ரிப்­புத் திட்­டத்­தில் சேரும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு பல சலு­கை­கள் கிடைக்­கும். இல­வச சுகா­தா­ரப் பரி­சோ­தனை, நாள்­பட்ட நோய்­க­ளுக்கு மெடி­சேவ் நிதி­யைப் பயன்­ப­டுத்­தி கட்­ட­ணம் செலுத்­து­தல் போன்­றவை அவற்­றுள் அடங்­கும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்ற வானொலி நேர்­கா­ண­லில் தெரி­வித்­தார்.

அடுத்த ஆண்டு பிற்­ப­கு­தி­யில் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­படும் இத்­திட்­டத்­தில் 60 வயது மற்­றும் அதற்கு மேற்­பட்­டோர் சேர்ந்து­கொள்­ள­லாம். தேசிய அள­வில் பரிந்­து­ரைக்­கப்­படும் சுகா­தா­ரப் பரி­சோ­தனை, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளு­தல் ஆகி­ய­வற்­றுக்கு அர­சாங்­கமே கட்­ட­ணம் செலுத்­தி­வி­டும் என்­றார் திரு ஓங்.

'மேலும் ஆரோக்­கி­ய­மான எஸ்ஜி' திட்­டத்­தில் சேரும் குடி­யிருப்­பா­ளர்­கள் முத­லில் ஒரு தொடக்கநிலைப் பரா­ம­ரிப்பு மருத்­து­வ­ரி­டம் பதிந்­து­கொள்ள வேண்­டும். அவர் அந்த நோயாளி தனது உடல்­ந­லத்­தைப் பரா­ம­ரிக்­கும் திட்­டத்தை வகுப்­பார் என்று அமைச்­சர், ஒன் எஃப்எம் 91.3 வானொலிக்கு அளித்த பேட்­டி­யில் விவ­ரித்­தார்.

"நாங்­கள் இத்­திட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளிக்­கும் வகை­யில் மருத்­து­வர்-நோயாளி உறவை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள மருத்­து­வர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றோம்.

"அந்த மருத்­து­வர் நோயா­ளியை சுகா­தா­ரப் பரி­சோ­த­னைக்­குச் செல்ல பரிந்­து­ரைக்­கக்­கூ­டும். அந்­தப் பரி­சோ­தனை இல­வ­ச­மாக வழங்­கப்­படும். அதே­போல், அர­சாங்­கம் தேசிய அள­வில் பரிந்­து­ரைக்­கும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளு­த­லுக்கு உங்­களை மருத்­து­வர் அனுப்­பக்­கூடும். மூத்­தோ­ருக்­கான சளிக் காய்ச்­சல், நிமோ­கோக்­கல் தடுப்­பூ­சி­களுக்­கும் அனுப்­பக்­கூ­டும். அவை­யும் இல­வ­ச­மா­கக் கிடைக்­கும்," என்­றார் திரு ஓங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!