மனிதவள அமைச்சு: வேலைச் சந்தையை பொருளியல் மந்தநிலை பாதிக்கக்கூடும்

வேலை­யில்­லாத விகி­தம் கடந்த ஆகஸ்ட்­ மாதத்தில் ஜூலை­ மாதத் துடன் ஒப்­பி­டு­கை­யில் குறைந்­தா­லும், பொரு­ளி­யல் மந்தநிலையால் ஏற்­படும் அபா­யங்­கள் தொழி­லா­ளர் சந்­தை­யைப் பாதிக்­கக்­கூ­டும்.

ஆகஸ்ட் மாத வேலை­யில்­லாத விகி­தத்தை நேற்று வெளி­யிட்ட மனி­த­வள அமைச்சு, ஆகஸ்­டில் 57,600 சிங்­கப்­பூரர்­கள் வேலை­யில்லாமல் இருந்­தார்­கள் என்­றது.

இது ஜூலை­ மாதத்தின் எண்­ணிக்­கை­யான 61,500ஐப் பார்க்கும்­ போது கிட்­டத்­தட்ட 4,000 குறைவு.

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வேலை­யில்லா விகி­தம் 0.2 விழுக்­காட்­டுப் புள்ளி குறைந்து 2.3 விழுக்­கா­டா­னது.

நிரந்­த­ர­வா­சி­க­ளை­யும் சிங்­கப்­பூ­ரர்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய குடி­யி­ருப்­பா­ளர் வேலை­யில்லா விகி­தம் ஆகஸ்­ட் மாதத்தில் 64,800 என்று இருந்­தது. ஒப்­பு­நோக்க ஜூலை­யின் விகி­தம் 68,900.

ஒட்­டு­மொத்த வேலை­யில்லா விகி­தம் 1.9%. குடி­யி­ருப்­பா­ளர்­களுக்கு அது 2.7%.

இரண்­டும் விகிதங்களும் சேர்ந்து ஜூலை மாதத்தின் விகி­தத்­தில் 0.2 விழுக்­காட்­டுப் புள்­ளி­யைக் குறைத்­தது.

"பெருந்­தொற்­றுக்கு முந்­திய காலத்­தில் இருந்த விகி­தத்­தைப் பார்க்­கும்­பொது தற்­போ­தைய வேலை­யில்லா விகி­தம் குறை­வாக உள்­ளது. உற்­பத்­தித் துறை­யின் குறை­வான வளர்ச்சி, அதி­க­ரித்து வரும் பண­வீக்­கம், வட்டி விகித அதி­க­ரிப்பு ஆகி­யவை தொழி­லா­ளர் சந்­தை­யைப் பாதிக்­கக்­கூ­டும்," என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.

ஜூலை மாதத்­தின் வேலை­யில்லா விதி­கத்தை கடந்த மாதம் 9ஆம் தேதி வெளி­யி­டும்­போது, "விமா­னத்­து­றை­யில் ஆட்­சேர்ப்பு நட­வ­டிக்கை முடுக்­கி­வி­டப்­பட்­டி­ருப்­ப­தால், வேலை­யில்லா விகி­தம் வரும் மாதங்­களில் குறை­வாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது," என்று அமைச்சு கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!