‘பேட்ஜ் லேடி’ மீது முகக்கவசம் அணியாதது தொடர்பில் மேலும் ஒரு குற்றச்சாட்டு

இணை­ய­வா­சி­க­ளால் 'பேட்ஜ் லேடி' என்று அழைக்­கப்­படும் ஃபூன் சியு யோக் (படம்) மீது மேலும் ஒரு குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது.

ஆர்ச்­சர்ட் சாலை­யில் உள்ள அயோன் ஆர்ச்­சர்ட் கடைத்­தொ­கு­தி­யில் ஏறக்­கு­றைய 15 நிமி­டங்­கள் முகக்­க­வ­சம் அணி­யா­மல் நடந்து சென்­ற­தாக நேற்று அவர் மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி முற்­ப­கல் 11.48 மணி முதல் பிற்­ப­கல் 12.03 மணி வரை அவர் இவ்­வாறு நடந்து சென்­ற­தா­கக் கூறப்­பட்­டது.

கடைத்­தொ­கு­தி­கள் போன்ற உள்­ள­ரங்­கு­களில் முகக்­க­வ­சம் அணி­யத் தேவை­யில்லை என்ற நடை­முறை ஆகஸ்ட் 29ஆம் தேதி­தான் நடப்­புக்கு வந்­தது.

முன்­ன­தாக, வெளிப்­பு­றங்­களில் முகக்­க­வ­சம் அணி­யத் தேவை­யில்லை என்ற நடை­முறை அம­லுக்கு வரு­வ­தற்கு முன்­னர் மார்ச் 6ஆம் தேதி ஆர்ச்­சர்ட் வட்­டா­ரத்­தில் முகக்­க­வ­சம் இல்­லா­மல் இவர் நடந்து சென்­ற­தாக, சென்ற மாதம் இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

இந்த 55 வயது மாது, சென்ற ஆண்டு மே 15ஆம் தேதி மரினா பே சேண்ட்­சில் முகக்­க­வ­சம் அணி­யா­மல் காணப்­பட்ட காணொளி இணை­யத்­தில் பர­வ­லா­னது. பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர்­கள் இவரை அணு­கி­ய­போது உங்­கள் அடை­யாள வில்­லை­யைக் காட்­டுங்­கள் என்று வாதிட்­டது அந்­தக் காணொ­ளி­யில் பதி­வா­கி­யி­ருந்­தது.

பின்­னர் 2021 ஜூன் 25ஆம் தேதி, பிணை­யில் வெளி­வந்­தி­ருந்த இம்­மாது மீண்­டும் முகக்­க­வ­சம் அணி­யா­மல் மேண்­ட­ரின் ஆர்ச்­சர்ட் சிங்­கப்­பூர் ஹோட்­ட­லில் காணப்­பட்­டார்.

இத்­த­கைய ஒன்­பது குற்­றங்­களை ஒப்­புக்­கொண்ட பிறகு, சென்ற ஆண்டு செப்­டம்­ப­ரில் திரு­வாட்டி ஃபூனுக்கு 16 மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அண்­மைய குற்­றச்­சாட்டு தொடர்­பில் விசா­ரணை இம்­மா­தம் 14ஆம் தேதி நடை­பெ­றும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!