லாரி பின்னால் சென்று மோதியதில் பணியாளர் மரணம்; 2022ல் இதுவரை 38 வேலையிட மரணங்கள்

ஹவ்காங் ஒன் கடைத்தொகுதியில் உள்ள லாரிகளுக்கான சரக்கேற்றும் இடத்தில், லாரி ஒன்று பின்னால் சென்று மோதியதில் 69 வயது துப்புரவுப் பணியாளர் உயிர் இழந்தார்.

கடந்த புதன்கிழமை 5ஆம் தேதி காலை அச்சம்பவம் நடந்ததாக மனிதவள அமைச்சு கூறியது.

அந்த சிங்கப்பூர் பணியாளர் செங்காங் பொது மருத்துவமனையில் காயங்கள் காரணமாக இறந்தார்.

அதன்வழி, சிங்கப்பூரில் இவ்வாண்டு இதுவரை ஏற்பட்ட வேலையிட மரணங்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது.

2021 முழுவதற்கும் அந்த எண்ணிக்கை 37 ஆகும்.

அக்டோபர் 3ஆம் தேதி நடந்த இன்னொரு சம்பவத்தில் 10 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த பங்ளாதேஷி ஊழியருக்குக் காயம் ஏற்பட்டது.

கஸ்கடன் ரோட்டில் உள்ள கட்டடத்தின் மூன்றாவது மாடியில் அவர் வேலை செய்துகொண்டிருந்தார்.

சிங்கப்பூர் கொடையாளர் டான் டோக் செங்கின் வழிதோன்றல்களுக்கு முன்பு சொந்தமாக இருந்த அவ்விடம் 2016ஆம் ஆண்டு விற்கப்பட்டது.

பங்ளாதேஷைச் சேர்ந்த ஊழியர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அப்போது நினைவிருந்தது.

அவர் பணியாற்றும் நாக்கானோ சிங்கப்பூர் நிறுவனத்துக்கு உயரத்தில் நின்று செய்யும் வேலைகளையும் சாரக்காட்டு தொடர்பான வேலைகளையும் நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!