அனைத்து பசிபிக் பரந்த, ஏறுமுக பங்காளித்துவ உடன்பாடு பற்றி அமைச்சர் விளக்கம் பிரிட்டனுக்கான மதிப்பீடே பொது அளவீடாக இருக்கும்

அனைத்து பசி­பிக் பரந்த, ஏறு­முக பங்­கா­ளித்­துவ உடன்­பாட்­டில் (சிபி­டி­பிபி) பிரிட்­டன் சேர்­வ­தற்குக் கைக்­கொள்­ளப்­படும் மதிப்­பீட்டு நடை­முறை­யே அந்த ஏற்­பாட்­டில் இதர நாடு­கள் சேர்­வ­தற்­கான பொது­ அள­வீ­டாக இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

அந்த வர்த்­தக உடன்­பாடு தொடர்­பான கூட்­டம் சிங்­கப்­பூர் தலை­மை­யில் நேற்று நடந்­தது. அதற்­குப் பிறகு 11 உறுப்பு நாடு­களைச் சேர்ந்த வர்த்­தக அமைச்­சர்­கள் கூட்டு செய்­தி­யா­ளர்­ மாநாட்­டில் பேசி­னர்.

பிரிட்­ட­னின் மதிப்­பீட்டு நடை­முறை தொடர்­பான விவா­தம் நடந்து வரு­வ­தா­க­வும் அந்த வர்த்­தக ஏற்­பாட்­டில் சேர்­வ­தற்­கான இதர விண்­ணப்­பங்­களும் பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­வ­தாகவும் அவர்­கள் கூறி­னர்.

சிபி­டி­பிபி உடன்­பாட்டை நீட்­டிப்­பதற்கு உறுப்பு நாடு­கள் ஆத­ரவு தெரி­வித்து இருப்­ப­தாக அந்­தக் கூட்­டத்­தில் பேசிய சிங்­கப்­பூ­ரின் வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, செய்­தி­யா­ளர்­களிடம் பேசிய ஜப்­பா­னிய பொருளி­யல், நிதிக் கொள்கை துணை அமைச்­சர் டஷிரோ யம­கிவா, பிரிட்­ட­னின் விண்­ணப்­பத்தை அங்கீ ­க­ரிப்­ப­தற்குக் காலக்­கெடு எது­வும் இல்லை என்று கூறி­னார்.

மதிப்­பீட்டுப் பணிக்­குழு பிரிட்­ட­னு­டன் இன்­ன­மும் பேச்சு நடத்தி வரு­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார். சிபி­டி­பிபி உடன்­பாட்டை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கும் ஒன்­ப­தா­வது உறுப்பு நாடாக மலே­சியா ஆகி இருக்­கிறது. இதை அமைச்­சர்­கள் பாராட்­டி­னர்.

மலே­சி­யா­வில் இந்த வர்த்­தக ஏற்­பாடு இந்த ஆண்டு நவம்­பர் 29ஆம் தேதி நடப்­புக்கு வரும்.

சிபி­டி­பிபி என்­பது தாராள வர்த்­தக உடன்­பாடு. அதில் 11 ஆசி­ய பசி­பிக் நாடு­கள் 2018 மார்ச்­சில் கையெ­ழுத்­திட்­டன.

உறுப்பு நாடு­க­ளி­டையே பொருள், சேவை வர்த்­த­கம் நடப்­ப­தற்­கான தடை­க­ளைக் குறைப்­பது அந்த மாநாட்­டின் நோக்­கம்.

உறுப்பு நாடு­களில் ஒன்று மற்­றொன்­றின் உற்­பத்­திப் பொருள்­களுக்­கான தீர்வை, இறக்­கு­மதி கட்­ட­ணங்­கள் அனைத்­தை­யும் அகற்­றி­வி­டு­வ­தாக உறுப்பு நாடு­கள் உறு­தி­கூறி இருக்­கின்­றன.

சிபி­டி­பிபி உடன்­பாடு கையெழுத்­தான நான்கே ஆண்­டு­களில் உறுப்பு நாடு­க­ளுக்கு வர்த்­தக நன்­மை­கள் கைகூ­டி­விட்­ட­தாக அமைச்­சர் கான் கூறி­னார்.

இந்த உடன்­பாட்டு நாடு­க­ளுக்கு இடையே சரக்கு வர்த்­த­கம், 2019ஆம் ஆண்­டில் US$467 பில்­லி­ய­னாக இருந்­தது.

இது 2021ல் US$535 பில்­லி­ய­னா­கக் கூடி இருக்­கிறது என்­பது ஓர் ஆய்வு மூலம் தெரி­ய­வந்­துள்­ள­தாக வர்த்தக, தொழில் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

அதே­போல, சேவை­கள் தொடர்­பான வர்த்­த­க­மும் ஏறு­மு­க­மாகி இருக்­கிறது என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!