சச்சரவுகளுக்குச் சமரச அணுகுமுறை: கட்டாயமாக்குவது பற்றி பரிசீலனை

ஆ. விஷ்ணு வர்­தினி

சமூக சம­ரச நிலை­யங்­களை நாடி சிறு­சிறு சச்­ச­ர­வு­க­ளைத் தீர்த்­துக்­கொள்­வ­தைக் கட்­டா­ய­மாக்­கு­வது பற்றி அமைச்­சு­கள் பரி­சீ­லித்து வரு­கின்­றன.

அத்­த­கைய சச்­ச­ர­வு­க­ளுக்குச் சம­ரச நிலை­யங்­கள் வழங்­கும் சமரச ஏற்­பா­டு­களை நீதி­மன்ற ஆணை களாகப் பதிவு செய்­வது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­படும் என்று கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங் தெரி­வித்­தார்.

அனைத்­து­லக சம­ரச நடு­வர்­கள் கழ­கத்­தின் கருத்­த­ரங்­கில் உரை­யாற்­றிய அமைச்­சர், கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்சு, சட்ட அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு ஆகி­யவை இணைந்து இந்­தப் பரி­சீ­ல­னை­களை நடத்தி வரு­வ­தா­கக் கூறி­னார்.

சிறு சிறு சச்­ச­ர­வு­க­ளைத் தவிர்த்­துக்கொள்­வ­தில் பக்­கத்து வீட்­டாரு­டன் கூடிய நல்­லு­றவை வளர்த்­துக் கொள்­வதே முதல் படி என்­று சட்ட இரண்­டா­ம் அமைச்­ச­ரு­மான திரு டோங் தெரி­வித்­தார்.

நீதி­மன்­றத்தை நாடி வழக்­குத் தொடுப்­ப­தை­விட சம­ரச அணு­கு­முறை, செல­வை­யும் நேரத்­தை­யும் மிச்­சப்­ப­டுத்­து­கிறது. மனப் பாதிப்பு­களைக் குறைக்­கிறது என்றாரவர்.

சம­ரச ஏற்­பாடு பற்­றிய விழிப்­பு­ணர்வை மேம்­ப­டுத்தி அத்­த­கைய தீர்­வு­களைப் பொது­மக்­கள் எளி­தாக அணு­கும் வகை­யில் சம­ரச நடு­வர்­களை அக்­கம்­பக்­கங்­க­ளுக்குக் கொண்டு வரும் முயற்சி பற்றி யோசிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

வேலை­யி­டத்­தில் ஏற்­ப­டக்­கூ­டிய சச்­ச­ர­வு­களைச் சம­ரச அணு­கு­முறை மூலம் கையாள ஊக்­கு­விக்­கும் நோக்­கத்­து­டன் நேற்­றைய நிகழ்ச்சி இரண்டு நிறு­வ­னங்­க­ளோடு இந்­தக் கழ­கம் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­த்தில் கையெ­ழுத்­திட்­டது.

ஆறு சம­யங்­க­ளின் தலை­வர்­கள் தத்­தம் சம­யம் பற்றி நேற்­றைய நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றி­னார்­கள்.

கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்ட அனைத்­து­லக சம­ரச நடு­வர் கழ­கத்­தின் துணைத் தலை­வ­ரான திரு ப. திரு­நா­வுக்­க­ரசு, சம­ரச அணுகு முறை மூலம் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு ஏற்­படும்­போது ஆழ­மான புரி­த­லும் நீண்­ட­கா­ல­மாக நீடிக்­கும் அமை­தி­யும் நட்­பும் ஏற்­ப­டு­வ­தா­கத் தெரிவித்தார்.

சச்­ச­ர­வு­க­ளுக்­குச் சம­ரசத் தீர்வு காணும் வழி­மு­றை­களை விளக்­கும் ஒரு புத்தகமும் நேற்­றைய நிகழ்ச்­சி­யில் வெளி­யி­டப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!