பழைய ஆடைகளோடு $14,000 தூக்கியெறியப்பட்டது

தனியார் வாடகை வாகன ஓட்டுநரான ஸோ என்பவர் அண்மையில் $14,000 இழந்துள்ளார். அவருடைய பழைய சட்டை ஒன்றில் $14,000 ரொக்கம் இருந்ததை அறியாத அவரது மனைவி அந்தச் சட்டை உட்பட மற்ற பழைய சட்டைகளையும் தூக்கியெறிந்துள்ளார்.

செப்டம்பர் 30ஆம் தேதியன்று ஸோவின் மனைவி வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். சில தேவையில்லாத பொருட்களோடு கணவரின் சில பழைய சட்டைகளையும் அவர் வசிக்கும் அடுக்குமாடி வீட்டின் அடித்தளத்தில் வைத்துள்ளார்.

தூக்கியெறியப்பட்ட ஒரு முழுக்கை சட்டையில் 14 ஆயிரம் வெள்ளி நோட்டுகள் இருந்தது அப்போது அவருக்குத் தெரியாது.

57 வயதான ஸோ கடந்த சில ஆண்டுகளாக ஆயிரம் வெள்ளி நோட்டுகளைச் சேகரித்து வந்துள்ளார். ஆயிரம் வெள்ளி நோட்டுகளை அச்சிடுவதை சிங்கப்பூர் நாணய ஆணையம் சென்றாண்டு நிறுத்தியது. ஏனினும் ஸோ அவற்றை தொடர்ந்து சேகரித்து வந்துள்ளார்.

நோட்டுகள் திருடுபோகாமல் இருக்க அவற்றை தனது சட்டை ஒன்றில் மறைத்து வைத்துள்ளார். ஆனால் இதுகுறித்து ஸோ தனது மனைவியிடம் ஒன்றும் கூறவில்லை.

தனது பழைய ஆடைகள் காணாமல்போனதை அறிந்த ஸோ உடனடியாக துணிகளைத் தேட அடித்தளத்திற்கு விரைந்துள்ளார். ஆனால் அங்கு வைக்கப்பட்டிருந்த துணிகளைக் காணவில்லை.

இதனைத் தொடர்ந்து ஸோ காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை தொடர்வதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!