தெம்பனிஸ், பொங்கோல் வீவக வீட்டுத் திட்டங்களுக்கு விருது

கொவிட்-19 தொற்­றுக் காலத்­தில் கட்­டு­மா­னத்தை நிறுத்த வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டா­லும் உள்­ளூர் நிறு­வ­ன­மான கே லிம் கன்ஸ்ட்­ரக்­‌ஷன் அண்ட் டிரே­டிங் நிறு­வ­னம், பல்­வேறு வழி­க­ளைக் கண்­ட­றிந்து தெம்­ப­னிஸ் கிரீன்­வெர்ஜ் பிடிஓ வீட்­டுத் திட்­டத்தை விரைந்து முடித்­தது.

இதற்­காக ஆளில்லா வானூர்தி, கண்­கா­ணிப்­பு கேம­ராக்­க­ளைப் பயன்­ப­டுத்தி கட்­டு­மான நட­வ­டிக்­கை­க­ளை­யும் அதன் முன்­னேற்­றத்­தை­யும் கண்­கா­ணித்­தது. கட்­டு­மான வேலை­கள் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­த­தும் மனி­த­வ­ளப் பற்­றாக்­குறை­யைச் சமா­ளிக்க அது தானி­யக்க சாத­னங்­களை முழு­வீச்­சில் பயன்­ப­டுத்­தி­யது.

கே லிம்­மின் இத்­த­கைய புத்­தாக்க முறை­யும் வலு­வான திட்ட நிர்­வா­க­மும் அதற்கு வீவக கட்­டு­மான விருதை வென்று தந்தன.

வீவக வடி­வ­மைப்பு, கட்­டு­மா­னம் மற்­றும் பொறி­யி­யல் விருது பெற்ற 22 நிறு­வ­னங்­களில் இது­வும் ஒன்று.

நாளை நடக்­கும் நிகழ்ச்­சி­யில் தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ அந்­நி­று­வ­னத்­துக்கு விருதை வழங்­க­வி­ருக்­கி­றார்.

கே லிம்­மின் தெம்­ப­னிஸ் கிரீன்­வெர்ஜ் பிடிஓ திட்­டம் இன்­றைய தேதி­யில் ஆகப்­பெ­ரிய வீட்­டுத் திட்­ட­மா­கும். இரு­பது புளோக்­கு­களில் 2,022 வீடு­கள் அங்கு கட்­டப்­பட்­டுள்­ளன. நான்கு ஆண்­டு­களில் அந்­தத் திட்­டம் முடிக்­கப்­பட்­டுள்­ளது. வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வீட்­டுச் சாவி கிடைப்­ப­தற்கு ஆறு மாதங்­களே தாம­த­மா­னது.

கே லிம்­மின் மூத்த திட்ட இயக்­கு­நர் சுவா ஹோ சியாங், கட்­டு­மா­னத்­தில் ஒற்றை அடுக்கு கார்­பேட்டை மிகப்­பெ­ரிய சவா­லாக இருந்­தா­கக் கூறி­னார். குடி­யி­ருப்­புப் புளோக்­கு­க­ளுக்கு அடி­யில் கார் பேட்டை கட்ட வேண்­டி­யி­ருந்­ததே அதற்குக் கார­ணம். ஒரே நேரத்­தில் கட்டி முடிப்­ப­தாக இருந்­தால் அது கடைசி கட்­டப் பணி­யாக இருக்க வேண்­டும். ஆனால் ஆறு மாத­கால தாம­தம் ஏற்­படும்.

"கட்­டு­மா­னத்தை விரை­வு­ப­டுத்த இரண்டு பகு­தி­க­ளா­கப் பிரித்­துக் கொண்­டோம். முதல் பகு­தி­யில் கார் ­பேட்­டை­யைக் கட்­டு­வ­தில் கவ­னம் செலுத்­தி­னோம். இரண்­டா­வது பகு­தி­யில் புளோக்­கு­க­ளைக் கட்­டி­னோம்," என்­றார்.

கார் பேட்­டை­யின் ஒரு பகுதி ஊழி­யர்­க­ளின் தங்­கு­மி­ட­மாக மாற்­றப்­பட்­டி­ருந்­தால் கொவிட்-19 கட்டுப்­ பா­டு­க­ளுக்கு மத்­தி­யில் அவர்­கள் அதி­கம் பய­ணம் செய்ய வேண்­டி­யது தவிர்க்­கப்­பட்­டது.

கட்­டு­மா­னத்­தின்­போது வெளி­யே­றும் நீரை வெளி­யேற்ற தானி­யக்க சாத­னங்­க­ளை­யும் நிறு­வ­னம் பயன்­ப­டுத்­தி­யது.

தெம்­ப­னிஸ் கிரீன்­வெர்ஜ் உட்­பட வீட­மைப்­புப் பிரி­வின் கீழ் விருது பெற்ற அனைத்து திட்­டங்­க­ளுக்­கும் 'கான்­கு­வாஸ்' என்ற நட்­சத்­திர மதிப்­பீ­டும் வழங்­கப்­பட்­டன. இது, கட்­டு­மா­னம், சிறந்த வேலைப்­பாடு களுக்­காக வழங்­கப்­படும் உய­ரிய மதிப்­பீ­டா­கும். பொங்­கோ­லில் சுர்­பானா ஜூரோங்­கின் ஓர் அங்­க­மான செஸ்மா இண்­டர்­நே­ஷ­னல் நிறு­வ­னம் கட்­டிய நார்த்­ஷோர் ஸ்ட்­ரைட்ஸ்­வியூ பிடிஓ திட்­ட­மும் ஆற்றல்­வாய்ந்த வடி­வ­மைப்­புக்­கும் கட்­ட­டக்­கலை அம்­சங்­க­ளுக்­கும் விருது பெற்­றது. கடற்­க­ரையை நோக்கி அமைந்த இந்­தத் ­திட்­டத்­தின் கீழ் எட்டு முதல் 26 மாடி­ களைக் கொண்ட ஐந்து புளோக்­கு­கள் கட்­டப்­பட்­டன. கட­லைப் பார்க்­கும் வகை­யில் பெரும்­பா­லான வீடு­கள் வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருந்­தன. மொத்­தம் 1,021 வீடு­கள் இங்கு கட்­டப்­பட்­டுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!