பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் நிவாஷினி; முதல் நாளே சிக்கல்

இவ்வாண்டு தொடங்கியிருக்கும் பிக் பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சியில் சிங்கப்பூரைச் சேர்ந்த நடிகையும் விளம்பர அழகியுமான நிவாஷினி பங்கெடுக்கிறார். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மறுநாளே நிஷாவினிக்குச் சிக்கல் தொடங்கிவிட்டது.

அவர் அடுத்த வாரம் வெளியேற்றத்துக்கு முன்மொழியப்பட்டிருக்கிறார்.

இந்தியாவின் விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, ஆறாவது ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது.

பிக் பாஸ் வீட்டுக்குள் சனிக்கிழமை 8ஆம் தேதி நிவாஷினி 19வது போட்டியாளராக நுழைந்தார்.

தொடக்கநிகழ்ச்சி மறுநாளான ஞாயிறு அன்று ஒளிபரப்பானது. இவ்வாண்டு 24 மணி நேரமும் பிக் பாஸ் ஒளிபரப்பாகிறது. ஆனால் வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமம் இல்லாததால் சிங்கப்பூர் ரசிகர்கள் அதைப் பார்க்க முடியாது.

வழக்கம் போல ஒரு மணி நேரத் தொகுப்பு நிகழ்ச்சியும் உண்டு. சிங்கப்பூரைச் சேர்ந்த நிவாஷினிக்கு வயது 24. அவர் சிங்கப்பூரில் படித்து வளர்ந்தவர்.

வசந்தம் நாடகங்களில் நடித்த அவர், சிங்கப்பூர் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு தெரிந்த முகம்.

தன்னிச்சையான திரைப்படங்களிலும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. சமூக ஊடகம் வழியாக நிவாஷினி மின்வர்த்தகத்தையும் நடத்தி வருகிறார்.

முதல் நாளே சித்து விளையாட்டுகளைத் தொடங்கிவிட்ட பிக் பாஸ், தங்களைக் கவராத சகப் போட்டியாளர்களை நியமிக்கும்படி கூறினார் என்று 24 மணிநேர ஒளிபரப்பைப் பார்த்தவர்கள் கூறினர்.

அதிக நியமனங்களைப் பெற்றவர்களில் ஒருவரான நிவாஷினி, வெளியேற்றத்துக்கு முன்மொழியப் பட்டிருக்கிறாராம்.

ஆனால் நிவாஷினிக்கு இப்போதே பிக் பாஸ் ரசிகர்கள் ஆர்மி உருவாக்கத் தொடங்கி விட்டார்கள்.

சிங்கப்பூர் ரசிகர்களும் நமது ஊர் பெண் என்று வரிந்துகட்ட ஆரம்பித்து விட்டார்கள். நிவாஷினி நீடிப்பார் என்று நம்புவோம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!