செய்திக்கொத்து

20,000 குடும்பங்களுக்கு பகுதிநேர இல்லத் துப்புரவு சேவைகள்

சிங்­கப்­பூ­ரில் 20,000க்கு மேற்­பட்ட குடும்­பங்­கள் தற்­போது பல நிறு­வ­னங்­கள் வழங்­கும் பகு­தி­நேர இல்­லத் துப்­பு­ரவு சேவை­க­ளைப் பயன்­ப­டுத்­து­கின்­றன.

'எச்­எஸ்­எஸ்' எனப்­படும் இல்­லச் சேவை­கள் திட்­டத்­தில் உள்ள இந்த நிறு­வ­னங்­க­ளுக்கு வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைக் கொண்டு பகு­தி­நேர இல்­லத் துப்­பு­ரவு சேவை­களை வழங்க அனு­மதி அளிக்கப்­பட்­டுள்­ளது.

தற்­போது இத்­திட்­டத்­தில் 134 நிறு­வ­னங்­கள் அங்­கம் வகிக்­கின்­றன. 2021ல் இந்த நிறு­வ­னங்­களின் எண்­ணிக்கை 76 ஆக இருந்­தது என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் இம்­மா­தம் 4ஆம் தேதி தமது எழுத்­து­பூர்வ நாடா­ளு­மன்­றப் பதி­லில் தெரி­வித்­தார்.

அந்த 20,000 குடும்­பங்­களில் 27% இதற்கு முன்­ன­தாக துப்­பு­ர­வுப் பணி­க­ளுக்கு வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­களைப் பயன்­ப­டுத்தி உள்­ள­ன என்று கூறிய டாக்­டர் டான், "அதி­க­மான வீட்டு வேலை­கள் மற்­றும் பரா­ம­ரிப்­புத் தேவை­கள் உள்ள குடும்­பங்­க­ளுக்கு இல்­லப் பணிப்­பெண்­கள் தேவைப்­படு­கின்­ற­னர். அதே­வே­ளை­யில், சற்று குறை­வான தேவை­கள் உள்ள குடும்­பங்­கள் பகு­தி­நேர இல்­லத் துப்­ப­ர­வுப் பணி­யா­ளர்­க­ளின் சேவையை நாடு­கின்­ற­னர்," என்­றார்.

வாரத்­துக்கு நான்கு மணி­நேர துப்­பு­ர­வுப் பணிக்கு மாதம் $300 லிருந்து $450 வரை செல­வா­கும் என்றும் முழு­நேர இல்­லப் பணிப்­பெண்­ணுக்கு தீர்­வைத் தவிர்த்து மாதம் $450லிருந்து $650 வரை சம்­ப­ளம் கொடுக்க வேண்­டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எஸ்பிஎஸ் பேருந்து மரத்தில் மோதி

54 வயது ஓட்டுநர் மரணம்

எஸ்பிஎஸ் பேருந்து ஒன்று மரத்தில் மோதியதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நேர்ந்ததாகக் கூறப்பட்டது (காணொளிப் படம்).

ஹவ்காங் அவென்யூ 3க்கும் டேஃபு அவென்யூ 1க்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் விபத்து நிகழ்ந்ததாக நேற்று முன்தினம் விடியற்காலை 2.47 மணிக்கு அழைப்பு கிடைத்ததாகக் காவல்துறை கூறியது. விபத்துக்குள்ளான பேருந்து, ஓட்டுநர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தப் பட்டது. விபத்து ஏற்பட்டபோது அதில் ஓட்டுநரைத் தவிர வேறு யாரும் இல்லை என்று எஸ்பிஎஸ் நிறுவனம் தெரி வித்தது. ஹவ்காங் பேருந்து பணிமனைக்குச் சென்று கொண்டு இருந்தபோது ஓட்டுநர் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதாகக் கூறப்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் அறிவித்தனர். காவல்துறை விசாரணை தொடர்கிறது.

இதற்கிடையே, இது 39வது வேலையிட மரணம் என்று மனிதவள அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ஆ லோங் என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட அந்த 54 வயது சிங்கப்பூரர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து ஓட்டு நராகவும் மதிக்கத்தக்க தொழிற்சங்கத் தலைவர் என்றும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறினார் என்டியுசி உதவித் தலைமைச் செயலாளரும் தேசிய போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகச் செயலாளருமான மெல்வின் யோங்.

அமைச்சர்கள் இந்திராணி, சிம் ஆன் வெளிநாடுகளுக்குப் பயணம்

பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி மற்றும் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா இன்று முதல் 14ஆம் தேதி வரை அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் நான்காவது ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் பங்கேற்பார்.

அக்கூட்டத்தில் உலகப் பொருளியலில் தற்போதைய நிலைமை, நீடித்த நிதி நிலைமை, பசுமையான, குறைந்த கரிம எதிர்காலம் போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்படும். அமைச்சருடன், நிதி அமைச்சின் அதிகாரிகளும் செல்கின்றனர்.

இதற்கிடையே, வெளியுறவு மற்றும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், இன்று முதல் 14ஆம் தேதி வரை ஐஸ்லாந்துத் தலைநகர் ரெய்காவிச்சுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

அங்கு அவர் ஆர்ட்டிக் வட்ட சபையின் தொடக்க நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துவார். மேலும் ஐஸ்லாந்தின் அரசியல் தலைவர்களையும் திருவாட்டி சிம் ஆன் சந்தித்து பேச்சு நடத்துவார். அவருடன் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் செல்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!