பொழுதுபோக்காக புத்தகம் படிப்பது அதிகரிப்பு

சிங்­கப்­பூ­ரில் அதி­க­மான பெரி­ய­வர்­களும் பதின்ம வய­தி­ன­ரும் பொழுது­போக்­கிற்­கா­கப் புத்­த­கம் படிக்­கின்­ற­னர்.

தேசிய நூலக வாரி­யத்­தின் 'தேசிய வாசிப்­புப் பழக்­கம் 2021' என்ற கருத்­தாய்­வின்­மூ­லம் இது தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த ஆண்­டில் 95% பெரி­ய­வர்­கள் ஓய்வுநேரத்­தின்­போது வாரத்­தில் ஒன்­றுக்கு மேற்­பட்ட முறை செய்­தி­கள், இணை­யக் கட்­டு­ரை­கள், புத்­த­கங்­கள் போன்­ற­வற்­றைப் படித்­த­னர்.

இவ்­வி­கி­தம் 2018ஆம் ஆண்­டில் 88 விழுக்­கா­டாக இருந்­தது.

பதின்ம வய­தி­ன­ரைப் பொறுத்­த­மட்­டில், 2018ல் 83 விழுக்­கா­டாக இருந்த இவ்­வி­கி­தம், சென்ற ஆண்­டில் 86 விழுக்­கா­டாக உயர்ந்­தது.

ஆய்­வில் பங்­கேற்ற பெரி­ய­வர்­களில் பெரும்­பா­லோர் வாரத்­தில் ஒன்­றுக்கு மேற்­பட்ட முறை இணை­யத்­தில் செய்­தி­கள் அல்­லது கட்­டு­ரை­களை வாசித்­த­னர். 34 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே வாரத்­தில் ஒரு­மு­றைக்­கு­மேல் புத்­த­கம் படித்­த­னர். 2018ல் இவ்­வி­கி­தம் 25 விழுக்­காடாக இருந்­தது.

17 முதல் 19 வயதிற்குட்பட்ட உயர்பதின்ம வய­தி­ன­ரைப் பொறுத்­த­மட்­டில், சமூக ஊட­கங்­கள் அல்­லது இணை­யத்­தில் செய்­தி­கள் அல்­லது கட்­டு­ரை­கள் படித்­தோர் விகி­தம் 73%. இது, 2018ல் 68 விழுக்­கா­டாக இருந்­தது. இப்­பி­ரி­வி­ன­ரில் பொழு­து­போக்­கிற்­காக வாரத்­தில் ஒன்­றுக்கு மேற்­பட்ட முறை புத்­த­கம் படிப்­போர் விகி­தம் 30 விழுக்­கா­டாக நீடிக்­கிறது.

காணொ­ளி­கள், மின்­னூல்­கள் போன்ற மின்­னி­லக்­கப் படைப்­பு­கள் சில பிரி­வி­ன­ரி­டத்­தில் பிர­பலமாகி வரு­கின்­றன.

2021ல் புத்­த­கம் படித்த பெரி­ய­வர்­களில் 58 விழுக்­காட்­டி­னர் குறைந்­தது ஒரு மின்­னூ­லை­யே­னும் படித்­த­னர். 2018ல் இது 55 விழுக்­கா­டாக இருந்­தது. ஆயி­னும், உயர் பதின்ம வய­தி­ன­ரிடத்தில் நான்கு ஆண்டுகளுக்குமுன் 64 விழுக்­காடாக இருந்த இவ்­வி­கி­தம், சென்ற ஆண்டு 60 விழுக்­கா­டா­கக் குறைந்­தது.

பெரி­ய­வர்­களில் 91 விழுக்­காட்­டி­ன­ரும் உயர் பதின்ம வய­தி­ன­ரில் 96 விழுக்­காட்­டி­ன­ரும் மகிழ்ச்­சிக்­காக காணொளி ஒளி­ப­ரப்­புத் தளங்­க­ளைப் பார்த்­த­னர். மாறாக, பெரி­ய­வர்­களில் 81 விழுக்­காட்­டி­னர், உயர் பதின்ம வய­தி­ன­ரில் 85 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே உலக நடப்­பு­களை அறிந்­து­கொள்­வ­தற்­காக அத்­த­ளங்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­னர்.

தேசிய நூலக வாரி­யம் கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்­ப­ர்­வரை, இணை­யம் வழி­யா­க­வும் வீடு வீடா­கச் சென்­றும் 3,774 சிங்­கப்­பூர்­வா­சி­க­ளின் வாசிப்­புப் பழக்­கத்தை அறிந்­து­வந்­தது. அவர்­களில் 2,918 பேர் 20 வய­தும் அதற்­கும் மேற்­பட்­ட­வர்­கள்; 692 பேர் 17 முதல் 19 வய­திற்­குட்­பட்ட உயர் பதின்ம வய­தி­னர்; 164 பேர் 13 முதல் 16 வய­திற்­குட்­பட்ட பதின்ம வய­தி­னர்.

"கடந்த இரண்டு ஆண்­டு­களில் கொவிட்-19 தொற்­றுப் பர­வல் நமது வாழ்க்­கை­யி­லும் வாழ்க்­கை­மு­றை­யி­லும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­ய­போ­தும், சிங்­கப்­பூ­ரர்­களில் பெரும்­பா­லோர் வாசித்­த­லை­யும் கற்­ற­லை­யும் தொடர்வது ஊக்­க­ம் அளிப்­ப­தாக உள்­ளது," என்று நூலக வாரி­யத்­தின் தலைமை நிர்­வாகி இங் செர் போங் தெரி­வித்­துள்­ளார்.

மின்­னி­லக்­கப் படைப்­பு­க­ளுக்கு இளை­யர்­கள் முன்­னு­ரிமை அளிப்­ப­தைத் தங்­க­ளது கருத்­தாய்வு முடிவு­கள் காட்­டு­வ­தாக திரு இங் குறிப்­பிட்­டார்.

"'நூல­கங்­கள், ஆவ­ணக் காப்­ப­கங்­கள் வரை­வுத்­திட்­டம் 2025'ன்கீழ், வெவ்­வேறு தளங்­க­ளி­லும் எங்­க­ளது சேவை­களை வழங்­கி­யும் மேம்­படுத்­தி­யும் வரு­கி­றோம். எல்லா வய­துப் பிரி­வி­ன­ரும் எந்த நேரத்­தி­லும் எந்த இடத்­தி­லும் வாசிப்­ப­தற்கு இத்­திட்­டம் வழி­வகை செய்­கிறது," என்­றும் அவர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!