‘ஆடவரின் முகம் முழுக்க ரத்தம்’: ஈசூன் கொலை குறித்து அண்டைவீட்டார் விளக்கம்

திருவாட்டி ஏடி என்பவர், தம் வீட்டு வாசல் கதவைத் திறந்தபோது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. முகத்திலும் ஆடைகளிலும் ரத்தத்துடன் காணப்பட்ட நடுத்தர வயதுடைய ஆடவர் ஒருவர், தம்மை வீட்டிற்குள்ளே விடுமாறு குசுகுசுத்தார்.

அதோடு அவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, அறைக்குள் ஓடி ஒளிந்துகொண்ட திருவாட்டி ஏடி, காவல்துறையை அழைத்தார்.

புளோக் 653 ஈசூன் அவென்யூ 4ல் நேற்று திங்கள்கிழமை மாலை நிகழ்ந்த சம்பவம் இது. சம்பவ இடத்திலேயே அந்த ஆடவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர்கள் கூறினர்.

இரவு 7.05 மணியளவில் தனக்கு தகவல் கிடைத்ததாகக் கூறிய காவல்துறை, கொலை செய்த குற்றத்திற்காக அந்த ஆடவரின் 19 வயது மகனைக் கைது செய்தது.

தம்முடைய நண்பரின் குடும்பத்துடன் நான்காவது மாடி வீட்டில் வசிக்கும் திருவாட்டி ஏடி, திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் வீட்டு வாசல் கதவைத் தட்டும் சத்தம் தமக்குக் கேட்டதாகக் கூறினார்.

“கதவைத் தட்டியது என்னுடைய நண்பரின் மகன் என நான் நினைத்தேன். ஆனால், கதவைத் திறந்தவுடன், ரத்தக் களறியுடன் நின்ற ஆடவரைக் கண்டு அதிர்ச்சியுற்றேன்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.

கொலை செய்யப்பட்ட ஆடவரின் குடும்பத்தார் அந்த புளோக்கின் ஐந்தாவது மாடியில் வசிக்கின்றனர்.

அந்த 19 வயது சந்தேகப் பேர்வழி, அந்த ஆடவரின் இளைய மகன் என நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

கைது செய்யப்பட்ட அந்த இளையர்மீது நாளை புதன்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Remote video URL
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!