தெய்வம் என நம்பவைத்து துன்புறுத்தியதாகப் பெண்மீது குற்றச்சாட்டு

தெய்­வம் என்று தம்மை நிலை­

நி­றுத்­திக்­கொண்டு, நம்பி வந்­தோரை பெண் ஒரு­வர் ஏமாற்­றி­னார். தமது பக்­தர்­களில் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து $3.5 மில்­லி­யன் நன்­கொ­டையை 52 வயது வூ மே ஹோ பெற்­றுக்­கொண்­டார்.

அது­மட்­டு­மின்றி தமது பக்­தர்­க­ளை­விட்டு பெண் ஒரு­வ­ரின் பல்லை வலுக்­கட்­டா­ய­மா­கப் பிடுங்­கி­னார். சிலரை மலம் உட்­கொள்­ள­வும் செய்­தார்.

தமது பக்­தர்­க­ளு­டன் சேர்ந்து அவர்­க­ளது வரு­மா­னம் குறித்து பொய்த் தக­வல் சமர்ப்­பிக்க வூ சதித்திட்­டம் தீட்­டி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சொத்­து­களை வாங்க $5 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான கட­னைப் பெற அவர் அவ்­வாறு செய்­தார்.

சிங்­கப்­பூ­ர­ரான வூவின் மீது 40க்கும் அதி­க­மான குற்­றச்­சாட்டு­ கள் பதி­வாகி உள்­ளன.

மோசடி, வேண்­டு­மென்றே படு­கா­யம் விளை­வித்­தல், தீங்கு விளை­விக்­கக்­கூ­டிய பொரு­ளைப் பயன்­ப­டுத்தி காயம் விளை­வித்­தல் ஆகிய குற்­றச்­சாட்­டு­கள் அவர் மீது சுமத்­தப்­பட்­டன.

2012ஆம் ஆண்­டி­லி­ருந்து 2020ஆம் ஆண்டு மே மாதம் வரை குறைந்­தது 14 பக்­தர்­

க­ளுக்கு எதி­ராக வூ குற்­றங்­கள் புரிந்­த­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­வித்­தன.

2019ஆம் ஆண்­டுக்­கும் 2020ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் திரு­வாட்டி ஜோடி ஓங் என்­ப­வரை வூ தொடர்ந்து பல­முறை துன்­பு­றுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. திரு­வாட்டி ஓங்­கிற்­குத் தற்­போது 43 வயது.

இந்­தி­யா­வில் பல்­வேறு திட்­டங்­களை அற­மு­கப்­ப­டுத்­தப்­போ­வ­தா­கக் கூறி தமது பக்­தர்­க­ளி­ட­மி­ருந்து வூ பணம் பெற்­றுக்­கொண்­டார். இதற்­காக அவ­ரது பக்­தர்­களில் ஒரு­வர் $3.5 மில்­லி­யன் தந்­தார்.

இந்­தி­யா­வில் கோயில் ஒன்­றைக் கட்­டப்­போ­வ­தா­கக் கூறி இன்­னொரு பக்­த­ரி­ட­மி­ருந்து வூ $2.5 மில்­லி­யன் பெற்­றுக்­கொண்­டார். மாடு­களை வாங்­கப்­போ­வ­தா­கச் சொல்லி தமது பக்­தர்­

க­ளி­ட­மி­ருந்து அவர் $800,000க்கும் அதி­க­மான தொகை­யைப் பெற்­றுக்­கொண்­ட­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

2020ஆம் ஆண்­டி­லி­ருந்து வூ விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார். அடுத்த மாதம் 17ஆம் தேதி­யன்று அவர் மீண்­டும் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­

ப­டு­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!