எக்ஸ்பிபி பற்றி தவறான தகவல்; பொஃப்மா பாய்ந்தது

எக்ஸ்பிபி பற்றி தவறான தகவல்; பொஃப்மா பாய்ந்தது

1 mins read
63b67709-f112-4268-beed-920314c7effc
-

தாய்­லாந்து மருத்­துவ செய்­தித் தள­மான 'ஹார்­ட்வேர்­ஸோன் ஃபாரம்', எதிர்க்­கட்சி அர­சி­யல்­வாதி கோ மெங் செங் ஆகி­யோ­ருக்கு கொவிட்-19 எக்ஸ்­பிபி உரு­மா­றிய கிருமி தொடர்­பில் தவ­றான தக­வல்­களை வெளி­யிட்­ட­தற்­காக 'பொஃப்மா' சட்­டத்­தின் கீழ் திருத்­தங்­களை வெளி­யிட உத்­த­ர­வி­டப்­பட்­டது. கோ மெங் செங் மக்­கள் சக்தி கட்­சி­யின் ஃபேஸ்புக் பக்­கத்­தி­லும் திருத்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது. 'ஹார்­ட்வேர்­ஸோன் ஃபாரம்', இணையத்தளத்தில் அக்டோபர் 9ஆம் தேதி 'பிரேக்கிங்!' என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் "புதிய ஸார்ஸ்-கோவ்-2 எக்ஸ்பிபி கிருமியால் சிங்கப்பூர் தாக்குதலுக்கு உள்ளாகி யது. அடுத்தது தாய்லாந்து," என எச்சரிக்கப்பட்டது.

'ஹார்ட்வேர்ஸோன் ஃபாரம்' ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கத்திலும் இந்தத் தகவல் வெளியானது.

"எக்ஸ்பிபி உருமாறிய கிருமி முந்தைய கிருமிகளைவிட கடுமை யான காய்ச்சலை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரமில்லை," என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.