மாணவர்கள் தயாரிப்பில் பாலின சமத்துவ ஆவணப் படங்கள்

தங்­க­ளின் ஆவ­ணப்­ ப­டங்­கள் மூலம் சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களும் மது­ரை­யில் அமைந்­துள்ள லேடி டோக் கல்­லூரி மாண­வர்­களும் பாலின சமத்­துவ விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த முயற்சி செய்­துள்­ளார்­கள். ‘பில்­டிங் பிரிட்­ஜஸ் ஆண்ட் பிரேக்­கிங் பேரி­யர்ஸ்’ என்ற இணை­யச் சேவைக் கற்­றல் திட்­டத்­தின்­மூ­லம் ஒன்­றி­ணைந்த இரு பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் மாண­வர்­களும் படத்­த­யா­ரிப்பு உத்­தி­க­ளை­யும் பாலின சமத்­துவ சிக்­கல்­களைக் கையா­ளும் முறை­க­ளை­யும் கற்­றுக்­கொண்­ட­னர்.

அத­னைத் தொடர்ந்து, ‘#நாட்­அலோன், சமூ­கங்­கள் எவ்­வாறு பாலி­யல் தொல்­லை­களை எதிர்­கொள்­கின்­றன?’, ‘#எம்­ப­வர், மேற்­ப­டிப்பு கல்­விக்­க­ழ­கங்­கள் எவ்­வாறு பெண்­களை ஊக்­கு­விக்­கின்­றன?’ என்ற தலைப்­பி­லான இரண்டு ஆவ­ணப் ­ப­டங்­களை மாண­வர்­கள் இணைந்து தயா­ரித்­துள்­ளார்­கள்.

‘யுனை­டெட் விமன் சிங்­கப்­பூர்’ அமைப்­பு­டன் இணைந்து, இரு பல்­க­லைக்­க­ழ­கங்­களும் படத் தயா­ரிப்பை மாண­வர்­க­ளுக்கு அறி­முகப்­ப­டுத்­தி­ய­து­டன் ஆவ­ணப்­ படங்­களை ஓர் ஊட­க­மா­கப் பயன்­படுத்தி, சமூ­கத்­தில் மாற்­றங்­க­ளைக் கொண்­டு­வ­ர­வும் மாண­வர்­களை ஊக்­கு­வித்­துள்­ள­னர்.

திட்­டத்­தில் கலந்­து­கொண்ட சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­கலைக்­க­ழக மாணவி ஏகம்மை சேது­ரா­மன், 20, ‘#எம்­ப­வர்’ காணொ­ளி­யில் ஒலி­ய­மைப்பு இயக்­கு­ந­ராக பங்­காற்­றி­னார்.

நான்கு மாதங்­கள் நீடித்த இந்­தத் திட்­டத்­தின்­மூ­லம் வெளி­நாட்டு மாண­வர்­க­ளு­டன் அர்த்­த­முள்ள கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்டு நல்­லு­ற­வு­க­ளைத் தான் வளர்த்­துக்­கொண்­ட­தாக கூறி­னார். கணக்­கி­யல் துறை­யில் பயி­லும் அவர், இந்­தி­யா­வில் நில­வும் நிலை­மை­யைப் பற்­றி­யும் ஆழ­மா­கத் தெரிந்து­கொண்­ட­தா­கக் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரி­லும் இந்­தி­யா­வி­லும் வேறு­பட்ட சமூக சூழல்­களில் மாறு­பட்ட சிக்­கல்­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர் பெண்­கள்.

அவற்­றுக்­கேற்ப, பாலி­யல் தொல்­லை­யால் அவ­தி­யு­றும் பெண்­களுக்கு சமூ­கத்­தா­ரும் பள்­ளி­களும் எவ்­வாறு உத­வ­லாம் என்­ப­தைக் காட்­டு­கிறது ‘#நாட்­அ­லோன்’ என்ற ஆவ­ணப் ­ப­டம்.

இரு நாடு­க­ளைச் சேர்ந்த பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளின் நேர்­கா­ண­லு­டன் பெண்­க­ளின் பாது­காப்­பை­யும் நல­னை­யும் உறு­தி­செய்­வ­தற்கு இரு பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கத்­தி­ன­ரும் எடுத்­து­வ­ரும் முயற்­சி­களை மாண­வர்­கள் ஆராய்ந்­த­னர்.

ஆணா­திக்­கம் மேலோங்­கி­யுள்ள விளை­யாட்டு, பொதுப் பாது­காப்பு, தொழில்­மு­னைவு முத­லிய துறை­களில் எல்லா பாலி­னத்­தா­ருக்­கும் சம வாய்ப்­பு­களை வழங்க, பள்­ளி­கள் மேற்­கொள்­ளும் முயற்­சி­க­ளைத் தொகுத்­துள்­ளது, ‘#எம்­ப­வர்’ என்ற ஆவ­ணப்­ ப­டம்.

“பண்­பாட்­டி­லும் பொரு­ளா­தார மேம்­பாட்­டி­லும் வேறு­பட்­டி­ருக்­கும் சிங்­கப்­பூர், இந்­தி­யா­வாழ் மாண­வர்­க­ளுக்கு, ஒரு­வ­ரை­யொ­ரு­வர் பற்றிப் புரிந்­து­கொள்ள இத்­திட்­டம் வாய்ப்­ப­ளித்­தது. அனை­வ­ருக்­கும் பொது­வா­ன­தொரு சவா­லாக உள்ள பாலின சமத்­து­வம் குறித்து கலந்­து­ரை­யாடி, நீடித்து நிலைக்­கும் நட்­பு­களை மாண­வர்­கள் வளர்த்­துக்­கொண்­ட­னர்,” என்­றார் லேடி டோக் கல்­லூ­ரி­யின் பெண்­கள் கல்வி நிலைய ஆலோ­ச­கர் முனை­வர் பியூலா ராஜ்­கு­மார்.

நேர­டி­யாக சந்­திக்க இய­லா­விட்­டா­லும் இணை­யம்­வழி கற்­ற­லின்­மூ­ல­மாக சமூ­கத்­துக்கு சேவை­யாற்­றும் ஒரு புது முயற்­சியை மேற்­கொண்­டது மாண­வர்­க­ளுக்கு நல்ல ஓர் அனு­ப­வ­மாக அமைந்­த­தாக சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­கலைக்­க­ழ­கம் தெரி­வித்­தது.

vishnuv@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!