இந்தியத் திருமண ஆடைகளுக்கான சிறப்புக் கண்காட்சி

இந்­தி­யத் திரு­ம­ணப் பழக்க வழக்கங்­க­ளைப் பிர­தி­ப­லிக்­கும் வண்­ணம் தீபா­வ­ளிப் பண்­டி­கையை ஒட்டி, சிறப்­புக் கண்­காட்சி ஒன்றை நிறு­வி­யுள்­ளது ‘சிங்­கப்­பூர் ஃபேஷன் கவுன்­சில்’.

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ‘டிசைன் ஆர்ச்­சர்ட்’ எனும் அர­சாங்க அமைப்­பு­க­ளின் கூட்டு முயற்சி நிறுவனம் நடத்தும் இக்­கண்­காட்­சி­யில், ‘மோனோ­கி­ராம்’ எனும் துணி­யில் வடி­வங்­கள் பதிக்­கும் பயி­ல­ரங்கு, ரங்­கோலி கோலம் கற்­பிக்­கும் பயி­ல­ரங்கு ஆகி­ய­வற்­று­டன் மரு­தா­ணி­யிட்­டுக் கொள்­ள­வும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

“இங்­குள்ள ‘லெஹெங்கா’ உடை­கள் கண்­க­வர் வண்­ணங்­களில் திரு­மண நிகழ்­விற்கு அணி­வ­து­போல பள­ப­ளப்­பாக இருக்­கின்­றன. ஆடை­க­ளுக்­குப் பொருத்­த­மான அழ­கிய அணி­க­லன்­களும் உள்­ளன,” என்­றார் வரு­கை­யா­ளர் பூஜா குமார், 37.

“மோனோ­கி­ராம் பயி­ல­ரங்­கில், சால்­வை­களில் தனித்­து­வ­மான வடி­வங்­கள் உரு­வாக்­கும் முறை­யைக் கற்­றுத்­தந்­தோம். வரு­கை­யா­ளர்­களின் ஆர்­வ­மான பங்­க­ளிப்பு மேலும் இத்­த­கைய பயி­ல­ரங்­கு­களை நடத்த ஊக்­கம் தந்­துள்­ளது,” என்று கூறி­னார் ‘சிங்­கப்­பூர் ஃபேஷன் கவுன்­சி­லின்’ செய­லா­ளர் திரு­வாட்டி ராஜு மேத்தா.

இல்­லத்­த­ரசி நளினி ஸ்ரீதர், 53, “ஆடை வடி­வ­மைப்­பு­களில் ஆர்­வம் கொண்ட எனக்கு இந்­தப் பயி­ல­ரங்கு மிக­வும் பய­னுள்­ள­தாக இருந்­தது. என் உற­வி­னர்­க­ளுக்­கும் நண்­பர்­க­ளுக்­கும் அவர்­க­ளது பெயர்­களின் முதல் எழுத்து பதித்த சால்­வை­களை இந்த தீபா­வ­ளிக்கு பரி­சா­கத் தர இருக்­கி­றேன்,” என்று மகிழ்ச்­சி­யு­டன் கூறி­னார்.

இம்­மா­தம் 5ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இக்­கண்­காட்சி நடை­பெ­றும்.

சிங்­கப்­பூ­ரின் பல இன, பல சமய நல்­லி­ணக்­கத்தை முன்­னி­றுத்­தும் வகை­யில் சீன, மலாய், பிரா­னாக்­கான், மேற்­கத்­திய இனத் திரு­மண ஆடை­களும் இதில் இடம்­பெற்­றுள்­ளன. ‘ஃபெஸ்டி­வல் ஆஃப் லைட்ஸ் பாப் அப்’ எனும் அங்­கம் மூலம் ‘ஆர்­டிட்­யூட்’, ‘இந்­தி­யன் ஸ்பைஸ் பாக்ஸ்’, ‘ஹவுஸ் ஆஃப் ஹேப்பி’, ‘மீரா’, ‘டோமி லிவிங்’, ‘டெம்­பிள் கேண்­டில்’ போன்ற புகழ்­பெற்ற இந்­திய வர்த்­தக நிறு­வ­னங்­க­ளின் கலைப் பொருள்­கள், மசா­லாப் பொருள்­கள், மெழு­கு­வத்­தி­கள், வீட்டு உப­யோ­கப் பொருள்­கள், அழ­குச் சாத­னப் பொருள்­கள் ஆகி­ய­வை­யும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்டுள்­ளன.

“சிங்­கப்­பூ­ரின் பல இன, பல சமய நல்­லி­ணக்­கத்தை ஆடை­கள் மூலம் வெளிப்­ப­டுத்­தும் இந்­தக் கண்­காட்­சிக்கு மக்­க­ளி­டம் கிடைத்­துள்ள வர­வேற்பு மகிழ்ச்சி அளிக்­கிறது,” என்று ‘டிசைன் ஆர்ச்­சர்ட்’ நிறு­வ­னத்­தின் பொது மேலா­ளர் ஜூலின் டே கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!