ஆசிய வளர்ச்சி வாய்ப்புகளைக் கைப்பற்ற திறந்தநிலை, மக்களிடத்தில் முதலீடு தேவை

ஆசி­யா­வில் நடுத்­தர வர்க்­கத்­தி­னர் அதி­க­ரிக்­கி­றார்­கள். பரு­வ­நிலை மாற்­றத்தைக் கருத்­தில்­கொண்டு சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த எரி­சக்தியைப் பயன்­ப­டுத்த முயற்­சி­கள் இடம்­பெறு­கின்­றன. மின்­னி­லக்­க­மயம் பெரு­கு­கிறது.

இவை எல்­லாம் சிங்­கப்­பூ­ரின் நீண்­ட­கால வளர்ச்­சிக்கு வாய்ப்­பு­களை வழங்­கு­கின்­றன என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்­தார்.

அந்த வாய்ப்­பு­களைக் கெட்­டி­யா­கப் பிடித்­துக்­கொள்ள வேண்­டு­மா­னால், சிங்­கப்­பூர் தொடர்ந்து தனது பொரு­ளி­யல் உத்­தி­க­ளைப் புதுப்­பித்து வர­வேண்­டும்; திறந்த நிலை­யில் இருந்­து­வர வேண்­டும்; தன் மக்­களிடத்தில் முத­லீடு செய்ய வேண்டும் என்று அவர் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்­பாட்டில் ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு நிலை­யத்­தில் நேற்று நடந்த 'ஆசிய எதிர்­கால உச்­ச­நிலை மாநாடு' என்ற மாநாட்­டில் அவர் உரை­யாற்­றி­னார்.

புவி­சார் அர­சி­யல் பதற்­றங்­கள், பொரு­ளில் பிரச்­சி­னை­கள் போன்ற இப்­போ­தைய சவால்­க­ளைச் சமா­ளிக்­கும் அதே­வே­ளை­யில், ஆசியா­வின் வளர்ச்­சி­யில் கண்­வைத்து அந்த வளர்ச்­சி­யி­னால் ஏற்­ப­டக்­கூடிய வாய்ப்­பு­களைக் கைப்­பற்­றும் வகை­யில், சிங்­கப்­பூர் தன் இலக்கு களை அமைத்­துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

"கொவிட்-19 தொற்­றில் இருந்து மீண்­டு­ தலை­யெ­டுக்­கும் வகை­யில் ஆசி­யா­வி­டம் மீள்­தி­றன் அதி­க­மாக இருக்­கிறது. ஒட்­டு­மொத்த உல­கப் பொரு­ளி­ய­லு­டன் ஒப்­பி­டு­கை­யில் ஆசி­யப் பொரு­ளி­யல் அவ்­வ­ள­வாகச் சுருங்­க­வில்லை.

"ஆசிய வளர்ச்சி வேக­மாக சூடு­பி­டிக்­கும் என்­றும் எதிர்­பார்க்­கப்­படு­கிறது," என அவர் கூறினார்.

நடுத்­தர வர்க்­கத்­தி­ன­ரின் தேவை­கள் கூடு­கின்­றன. இதை வைத்துப் பார்க்­கை­யில், உல­கிலேயே ஆக வேக­மாக வளர்ச்சி காணும் பொரு­ளி­யல்­க­ளைக் கொண்ட நாடு­க­ளாக ஆசிய நாடு­கள் திக­ழும் என எதிர்­பார்க்­கப்­படு­வ­தாக அமைச்­சர் கூறி­னார்.

"உல­கின் பய­னீட்­டா­ளர் தேவை­களில் பெரும்பகு­தி ஆசி­யா­வைச் சேர்ந்­த­தாக இருக்­கும்.

"இதன் கார­ண­மாக உல­கப் பொரு­ளி­யலை இழுத்­துச் செல்­லும் சக்­தி­யாக ஆசிய வட்­டா­ரமே திகழும்," என்­றார் அவர்.

தென்­கி­ழக்கு ஆசிய வட்­டா­ரம் பல வளர்ச்சி வாய்ப்­பு­க­ளைக் கொண்ட துறை­க­ளைப் பெற்று இருக்­கிறது. தென்­கி­ழக்கு ஆசிய நாடு­கள் ஒன்­று­டன் ஒன்று சேர்ந்து செயல்­பட்டு அந்த வாய்ப்­பு­க­ளைக் கைப்­பற்­றிக்கொள்ள வேண்­டும் என்று டாக்­டர் டான் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நுண்­ணோக்குச் செய்­தித் துறை ஆசி­ரி­யர் கிரேஸ் ஹோவு­டன் கலந்­து­ரை­யா­ட­லில் கலந்­து­கொண்ட டாக்­டர் டான், எரி­சக்தியைப் பொறுத்­த­வரை சிங்­கப்­பூர் பெரி­தும் தன்­னி­றைவு பெற்ற நாடாக எப்­படித் திகழ முடி­யும் என்­பது பற்றி கருத்­து­ரைத்­தார்.

எரி­சக்திப் பாது­காப்பே இதில் முக்­கிய அம்­ச­மாக இருக்­கும் என்­றார் அவர். மின்­னி­லக்­கம் பற்றி கருத்­து­ கூ­றிய அமைச்­சர், பொரு­ளி­யல்­களில் மின்­னி­லக்க வர்த்­த­கமும் மின்­னி­லக்­கப் பொரு­ளி­ய­லும் ஆற்­றும் முக்­கிய பணி கூடி­வ­ரு­வதா­கத் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் தொடர்ந்து தலை­சிறந்த நிறு­வ­னங்­க­ளை­யும் ஆற்­றல் மிக்­க­வர்­க­ளை­யும் கவர்ந்து ஈர்த்து வர­வேண்­டும் என்­றா­ர­வர்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கான தேர்ச்சி, பயிற்­சி­யி­லும் வாழ்க்­கைத்தொழில் வழி­க­ளி­லும் அர­சாங்­கம் தொடர்ந்து முத­லீடு செய்­யும் என்று கூறிய டாக்­டர் டான், முத்­த­ரப்புப் பங்­காளி­களு­டன் சேர்ந்து செயல்­பட்டு நியா­ய­மான, ஆத­ர­வு­மிக்க வேலை­யி­டங்­களை அர­சாங்­கம் பலப்­ப­டுத்­தும் என்­றும் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் குறு­கி­ய­கால சவால்­களைச் சமா­ளித்து புதிய வாய்ப்பு­களைப் பயன்­ப­டுத்­திக்கொள்ள முடி­யும் என்று தான் நம்­பு­வ­தா­க­வும் டாக்­டர் டான் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!