செய்திக்கொத்து

'டைசோ'வில் விற்கப்படும் குக்கீ வகை மீட்டுக்கொள்ளப்படுகிறது

'டைசோ சிங்கப்பூர்' நிறுவனத்தின் 27 கடைகளிலும் விற்கப்படும் 'எச்&எச் திராமிசு டுவிஸ்ட்' (H&H Tiramisu Twist) குக்கீ வகை மீட்டுக்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு நேற்று தெரிவித்தது. அதில் சேர்த்துக்கொள்ளப்பட்ட உணவுப் பொருள்கள் சிலவற்றைப் பயனீட்டாளருக்குத் தெரியப்படுத்தத் தவறிய நிலையில் அந்த உணவுப் பொருள்களால் சிலருக்கு ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட தயாரிப்புகளில் ஜூன் 2023, ஜூலை 2023, அக்டோபர் 2023 ஆகிய காலாவதி தேதிகள் குறிக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. (படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு)

பள்ளி வளங்கள் பகிர்வுத் திட்டம் தொடங்கி 40 ஆண்டுகள்

வசதிகுறைந்த மாணவர்களுக்குத் தேவையான பள்ளி வளங்களை வழங்கும் சமூகத் திட்டம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளாகிவிட்டன. அத்துடன் இவ்வாண்டு என்றும் இல்லாத எண்ணிக்கையாக 2,700 தொண்டூழியர்கள் என்டியுசியின் 'ஷேர்-எ-டெக்ஸ்புக்' (Share-A-Textbook) திட்டத்தில் இணைந்திருந்தனர்.

பள்ளிப் புத்தகங்களின் மறுபயனீடு, மறுபயன்பாடு ஆகியவற்றின்வழி சுற்றுச்சூழலின் நீடித்த நிலைத்தன்மைக்கும் இத்திட்டம் ஆதரவாக இருந்து வருகிறது. இதுவரை 6.8 மில்லியன் பள்ளிப் புத்தகங்களை மறுவிநியோகம் செய்துள்ளது இத்திட்டம். இதன் மூலம் 280,000க்கும் மேற்பட்டோருக்கு உதவி கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் சான் சுன் சிங், "இத்திட்டம் வெறும் பள்ளிப் புத்தகங்களை மற்றவர்க்குத் தருவது மட்டுமல்ல. நன்றியுணர்வுப் பண்பை உணர்த்தும் திட்டம் இது," என்றார்.

பரிந்துரைகள் மூலம் சுற்றுச்சூழல் நடவடிக்கை கோரும் இளையர்கள்

சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் தொடர்பான நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பில் பரிந்துரைகள் கொண்ட கொள்கை அறிக்கை ஒன்று நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த 'கிரீன் எஸ்ஜி' கொள்கை அறிக்கையின் உருவாக்கத்திற்கு ஏறத்தாழ 50 இளையர்கள் பங்களித்துள்ளனர். சிங்கப்பூர் இளையர் பருவநிலை செயல்பாட்டு அமைப்பைச் சேர்ந்த ரிஷிகா செல்வன், சுவாதி மேண்ட்லொய் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

எகிப்தில் வரும் ஞாயிறு அன்று தொடங்கவுள்ள 'கோப்27' (COP27) பருவநிலை மாநாட்டின்போது அறிக்கையின் ஆசிரியர்கள் தங்களின் பரிந்துரைகளை சிங்கப்பூர் அரசாங்கத்தில் முக்கிய முடிவெடுப்பவர்களிடம் முன்வைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!