அதிபர் ஹலிமா, பிரதமர் லீயுடன் சீனத் துணைப் பிரதமர் சந்திப்பு

சிங்­கப்­பூ­ருக்கு வரு­கை­ய­ளித்­துள்ள சீனத் துணைப் பிர­த­மர் ஹான் செங், நேற்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் மற்­றும் பிர­த­மர் லீ சியன் லூங் உட்­பட நாட்­டின் உயர்­மட்­டத் தலை­வர்­க­ளைச் சந்­தித்து இரு நாட்டு உறவை மறு­உ­று­திப்­ப­டுத்­திக்­கொண்­ட­து­டன் தற்­போ­தைய ஒத்­து­ழைப்பு நிலை­யை­யும் மறு­பார்­வை­யிட்­டார்.

அவர் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்­புக்­கான கூட்டு மன்­றத்­தின் இணைத் தலை­வ­ராக இருந்த நிலை­யில் சிங்­கப்­பூ­ருக்­கும் சீனா­வுக்­கும் இடையே மொத்­தம் 19 ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கின.

குளிர்­கால ஒலிம்­பிக் விளை­யாட்­டு­க­ளுக்­காக அதி­பர் ஹலிமா, கடந்த பிப்­ர­வரி மாதம் பெய்­ஜிங் சென்­றி­ருந்­த­போது சீனா­வில் தமக்­குக் கிடைத்த உப­ச­ரிப்பு தொடர்­பில் திரு ஹானுக்கு நன்றி தெரி­வித்­துத் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டி­ருந்­தார்.

இஸ்­தா­னா­வில் அதி­பர் ஹலி­மாவை திரு ஹான் சந்­தித்­த­போது இரு­வ­ரும் சிங்­கப்­பூர், சீனா­வுக்கு இடை­யி­லான நீண்­ட­கால, அணுக்­க­மான உறவை மறு­உ­று­திப்­ப­டுத்­திக்­கொண்­ட­னர்.

இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்­பி­லும் உள்ள வளர்ச்சி நிலை­யைத் தொடர்ந்து மேம்­ப­டுத்த வேண்­டும் என்று குறிப்­பிட்ட திரு­வாட்டி ஹலிமா, மின்­னி­லக்க உல­கில் உரு­வா­கும் புதிய வாய்ப்­பு­க­ளைப் பயன்­படுத்­திக்­கொண்டு நீடித்த நிலைத்­தன்­மை­யு­டைய, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய வளர்ச்சி நிலையை ஏற்­ப­டுத்தி இருநாட்டு மக்­க­ளின் வாழ்க்­கையை மேம்­ப­டுத்த சிங்­கப்­பூ­ரும் சீனா­வும் செயல்­பட வேண்­டும்," என்­றார்.

சிங்­கப்­பூ­ரும் சீனா­வும் தங்­க­ளின் ஒத்­து­ழைப்­பைத் தொடர்ந்து வலு­வாக்­கி­ய­து­டன் கொள்­ளை­நோ­யின்­போது புதிய அம்­சங்­களில் அந்த ஒத்­து­ழைப்­பைக் கொண்டு சென்­ற­தா­க­வும் திரு ஹானைச் சந்­தித்­த­தன் தொடர்­பில் பிர­த­மர் லீ தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!