சிங்கப்பூர் ஊழியர்களின் இலக்குகளுக்கு உதவி

வெறும் பயிற்­சி­களை மட்­டுமே நடத்­தா­மல், அதற்கும் அப்­பால் சிங்­கப் பூரர்­க­ளுக்கு நம்­பிக்­கை­ய­ளிக்­கும் துறை­களில் வேலை­க­ளைக் கண்­ ட­றிய அர­சாங்­கம் உத­வும்.

அவர்­க­ளு­டைய நீண்­ட­கால வாழ்க்­கைத் தொழில் இலக்­கு­களை நிர்­ண­யித்து அவர்­க­ளின் வாழ்க்­தைத் தொழில் பய­ணத்­திற்கும் அரசு கைகொ­டுக்­கும்.

மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கைத் தொழில் பாதைக்கு ஊழி­யர்­க­ளைத் தயார்­ப்ப­டுத்­து­வதே இதன் நோக்­கம் என்­றார் அவர்.

நேற்று நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் 60க்கும் மேற்­பட்ட நிபு­ணர் ­­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­க­ளி­டம் அவர் கலந்­து­ரை­யா­டி­னார்.

முன்­னே­றும் சிங்­கப்­பூர்த் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இந்­தக் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது. டாக்­டர் டானு­டன் என்டியுசி தலை மைச் செயலாளர் இங் சீ மெங்­கும் கலந்து­கொண்­டார்.

கலந்­து­ரை­யா­டலை மனி­த­வள அமைச்­சின் மனி­த­வ­ளத் திட்ட, கொள்­கை­க­ளுக்­கான வட்டாரப் பிரி­வின் இயக்­கு­நர் கென்னி டான் வழி நடத்­தி­னார்.

வர்த்­தக தொழில் இரண்­டாம் அமைச்­ச­ரு­மான டாக்­டர் டானும் திரு இங்­கும் மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் கோ போ கூனு­டன் சேர்ந்து முன்­னே­றும் சிங்­கப்­பூர் திட்­டத்­தின்கீழ் வேலை, பொரு­ளி­ய­லுக்கு தலை­மை­யேற்று செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

கடந்த ஜூன் மாதத்­தில் துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய சமு­தா­யத்தை உருவாக்கும் நோக்கத் தோடு அந்­தத் திட்­டத்தை தொடங்கி ­வைத்­தார்.

இந்த நிலை­யில் இது­வரை நடந்த கலந்­து­ரை­யா­ட­லில் எதி­ரொ­லித்த பிரச்­சி­னை­களை டாக்­டர் டான் நேற்று பகிர்ந்­து­கொண்­டார்.

"கல்வி, பயிற்சி, வேலை வாய்ப்பு குறித்து கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­வர்­கள் கவலைப்படுகின்றனர்.அத்துடன் வேலை­யின்மை ஆத­ரவு மற்­றும் ஓய்­வுக்­கால தேவை­க­ளிலும் அவர்­கள் அதிக அக்­கறை காட்­டு­ கின்­ற­னர்," என்று திரு டான் குறிப்­பிட்­டார்.

இந்­தக் கவ­லை­க­ளைப் போக்க சிங்­கப்­பூரின் சமூ­கப் பொறுப்பு, பங்­க­ளிப்­பு­களை புதுப்­பிப்­பது அவ­சி­யம் என்ற அவர், அதற்­கான பல்­வேறு சாத்­தி­யக் கூறு­க­ளை­யும் முன்­வைத்­தார்.

செயற்கை நுண்­ண­றிவு, தர­வு­கள் மூலம் புதிய வாய்ப்­பு­க­ளைக் கண்­ட­றிந்து அவற்றை நோக்கிய பய­ணத்தில் ஊழி­யர்­க­ளுக்கு உத­வு­தல், ஒரு­வ­ரின் வாழ்­க்கைத் தொழில் பாதையை சரி­பார்ப்­பது, ஊழி­யர்­க­ளின் விருப்­பங்­களை பூர்த்தி செய்­ய உத­வு­வது போன்­ற­வற்றை உள்­ள­டக்­கிய யோசனை களை அவர் பட்­டி­ய­லிட்­டார்.

"அனைத்­து­லக அனு­ப­வங்­கள், திறன் மற்­றும் வாய்ப்­பு­க­ளு­டன் தங்­க­ளு­டைய துறை­யில் ஒரு நிபு­ண­ரா­கவோ அல்­லது தலை­வ­ரா­கவோ செயல்­படும் நியா­ய­மான வாய்ப்பு வழங்­கப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

"அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய ஊழி­யர் சந்­தை­யில் தொழில் பயிற்சி­ களும் அறி­வாற்­றல்­மிக்க திற­னாக மதிப்­பி­டப்­பிட வேண்டும்.

"அதே சம­யத்­தில் ஓய்வு காலத்தை நெருங்­கு­ப­வர்­கள் தொடர்ந்து மத்­திய சேம நிதிக்கு பங்­க­ளித்­தால் அவர்­க­ளின் அடிப்­படைத் தேவை­களை பூர்த்தி செய்வது உறு­திப்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!