மகனுக்காக போதையில் இருந்து மீண்ட முன்னாள் குற்றவாளி

நண்­பர்­கள் எக்ஸ்­டசி, எரி­மன்-5 போதை மாத்­தி­ரை­களை அறி­மு­கப் ­ப­டுத்­தி­ய­தைத் தொடர்ந்து 14 வய­தில் பொழுது­போக்­காக கிரேஸ் சிம் போதைக்­குப் பழக்­க­மா­னார்.

இதற்கு முன்பு தொடக்­கப்­பள்ளி படிப்­பை­யும் அவர் கைவிட்­டி­ருந்­தார்.

நான்கு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு போதைப் பொரு­ளைப் பயன்­ப­டுத் ­தி­ய­தற்­காக அவர் ஓராண்டு மறு­வாழ்வு நிலை­யத்­திற்கு அனுப்­பப்­பட்­டார்.

போதைப் பழக்­கத்­தி­லி­ருந்து விடு­ப­டாத அவர் மேலும் இரண்டு முறை சிறை­வா­சத்தை அனு­ப­விக்க நேரிட்­டது. 25வது வய­தில் நீண்­ட­கால சிறை வாழ்க்­கைக்­குப் பிறகு அவ­ரது வாழ்க்­கை­யில் மாற்­றம் ஏற்­பட்­டது.

"ஏற்­கெ­னவே 23வது வய­தில் ஒற்­றைப் பெற்­றோ­ராக இருந்­தேன். ஓராண்டு காலத்­திற்கு மட்­டுமே என்­னு­டைய மகனை கவ­னிக்க முடிந்­தது. அதற்­குள் மீண்­டும் கை தா­னேன். இம்­முறை ஐந்து ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. என்­னு­டைய மக­னுக்கு சிறந்த தாயாக இருக்க என்­னையே மாற்றிக்கொண்­டேன்," என்று கிரேஸ் சிம் தெரி­வித்­தார்.

இன்று, 34 வய­தா­கும் அவர், கடந்த ஒன்­பது ஆண்­டு­கா­ல­மாக போதை­யற்ற வாழ்க்­கையை வாழ்ந்து வரு­கி­றார்.

'எக்ஸ்­டெல்' தூதஞ்­சல் நிறு­வ­னத்­தில் வாடிக்­கை­யா­ளர் சேவை குழு­வுக்குத் தலை­வ­ராக அவர் நிரந்­த­ர­மான வேலை­யில் இருந்து வரு­கி­றார்.

நேற்று நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் திருந்தி வாழும் 70 முன்­னாள் கைதி­க­ளுக்கு விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்­ட­வர்­களில் கிரேஸ் சிம்­மும் ஒரு­வர்.

'த ஸ்டார்' அரங்­கில் மஞ்­சள் நாடா விருது நிகழ்ச்சி நடை­பெற்­றது.

இரண்­டா­வது வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி தங்­களை மாற்றி சாத­னை­க­ளை­யும் பங்­க­ளிப்­பை­யும் செய்த முன்­னாள் குற்­ற­வா­ளி­கள், கைதி­க­ளுக்கு சிங்­கப்­பூர் சிறை சேவையால் மஞ்­சள் நாடா விருது வழங்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­கழ்ச்­சி­யில் தமது அனு­ப­வங்களைப் பகிர்ந்­து­கொண்ட கிரேஸ் சிம், தனது பாதை எளி­தாக இல்­லை­யென்­றா­லும் மதிப்­பு­வாய்ந்தது என்றார்.

"நீங்­க­ளாக மாறா­வி­டில் உங்­களை யாரா­லும் மாற்ற முடி­யாது.

"மற்­ற­வர்­கள் என்ன நினைப்­பார்­கள், என்ன சொல்­வார்­கள் என்­பது பற்றி கவ­லைப்­பட வேண்­டி­ய­தில்லை. அவர்­கள் சொன்­னது பொய் என்­பதை உங்­க­ளு­டைய செய­லால் நிரூ­பித்­துக் காட்ட முடி­யும்," என்­று அவர் கூறினார்.

நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­க பங்­கேற்ற இரண்­டாம் உள்­துறை அமைச்­ச­ரான ஜோச­ஃபின் டியோ, முன்­னாள் குற்­ற­வா­ளி­கள் திருந்­து­வ­தற்கு குடும்ப உறுப்­பி­னர்­களும் சமூ­க­மும் அளித்த ஆத­ர வுக்கு நன்றி தெரிவித்துக் கொண் டார். சமூ­கத்­தில் அவர்கள் நீண்­ட­கா­லம் ஒருங்­கி­ணைந்து இருக்க இன்­னும் அதி­கம் செய்­ய­லாம் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!