துணைப்பாட ஆசிரியருக்கு 4 நாள் சிறை

தவ­றான விடை­ய­ளித்­த­தற்­காக எட்டு வயது மாண­வி­யைத் தாக்­கிய துணைப்­பாட வகுப்பு ஆசி­ரி­ய­ருக்கு நேற்று நான்கு நாள் சிறை தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

டியோ தியன் ஹோ, 57, முன்­ன­தாக தம் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை ஒப்­புக்கொண்­டார். அவ­ருக்கு தண்­டனை விதிக்­கப்­ப­டும்­போது இதே போன்ற மற்­றொரு குற்­றச் செய­லும் கவ­னத்­தில் எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.

மாண­வி­யின் பாது­காப்பு கருதி அவ­ரது பெயர் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

மாண­வி­யின் தந்தை அவரை இணை­யம் வழி­யா­கக் கண்­டு­ பிடித்து கடந்த ஜன­வ­ரி­யில் துணைப் பாட ஆசி­ரி­ய­ராக அமர்த்­தி­யி­ருந்­தார்.

மார்ச் 18ஆம் தேதி வீட்­டில் உள்ள பயி­ல­றை­யில் அந்த மாணவி, கேள்வி ஒன்­றுக்கு தவ­றான பதில் அளித்­த­தால் டியோ பொறு­மை­ யிழந்­தார்.

மாண­வி­யைத் திட்­டி­ய­தோடு அவ­ரது முன்­கையை டியோ மூன்று முறை கிள்­ளி­னார். மாண­வி­யின் இடது கையில் இரண்டு முறை அவர் குத்­தி­னார். வலி­யால் அழுத மாணவி தந்­தை­யி­டம் தெரி­வித்­தார். ஆனால் மாண­வி­யின் தந்தை அதை பெரி­தாக எடுத்­துக் கொள்­ள­வில்லை.

ஆனால் இரண்­டாது முறை மார்ச் 22ஆம் தேதி­யன்று தனது மகளை டியோ அடிப்­பதை கண்­கா­ணிப்பு கேமரா வழி­யாக தந்தை தெரிந்­து­கொண்­டார். இதை­ய­டுத்து அவர் காவல்­து­றை­யில் புகார் அளித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!