‘கூடுதலான துறைகள் முன்வர வேண்டும்’

உடற்குறையுள்ளோருக்கு வேலைதருவது குறித்து அதிபர் ஹலிமா வலியுறுத்து

உணவு, பானத் துறை, ஹோட்­டல் துறை, சமை­யல் நிறு­வ­னங்­கள் போன்­றவை தவிர்த்த பிற துறை­களி­லும் உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்கு வேலை­வாய்ப்பு வழங்­கு­வ­தற்கு முத­லா­ளி­கள் கூடு­த­லாக உத­வ­வேண்­டும் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் கூறி­யி­ருக்­கி­றார்.

உடற்­குறை இருந்­தா­லும் உயர்­கல்­வித் தகு­தி­யு­டன் இருப்­போர் கூடு­த­லான பொறுப்பை ஏற்க முடி­யும் என்­றார் அவர்.

பல­ருக்கு நட­மாட்­டப் பிரச்­சினை இருந்­த­போ­தும் அவர்­க­ளது மதி­நுட்­பத் திறன் சிக்­க­லான வேலை­களைச் செய்­யும் மற்­ற­வர்­க­ளுக்கு ஈடா­னதே என்று அதி­பர் குறிப்­பிட்­டார்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை, நூல­கச் சேவை, வங்­கி­கள் போன்ற துறை­கள் ஏற்­கெ­னவே உடற்­குறை உள்­ளோ­ருக்கு வேலை­தர முன்­வந்­தி­ருந்­தா­லும் இன்­னும் கூடு­த­லா­கச் செய்ய முடி­யும் என்று திரு­வாட்டி ஹலிமா வலி­யு­றுத்­தி­னார்.

மனி­த­வ­ளப் பயிற்சி நிறு­வ­ன­மான ஹியூ­மன் கேப்­பி­டல் சிங்­கப்­பூ­ரும் எஸ்ஜி எனே­பிள் திட்­ட­மும் இணைந்து இஸ்­தா­னா­வில் நேற்று நடத்­திய உடற்­கு­றை­யுள்­ளோரை உள்­ள­டக்­கிய ஆட்­சேர்ப்­புப் பயி­ல­ரங்­கில் அதி­பர் உரை­யாற்­றி­னார்.

இதில் உடற்­கு­றை­யுள்ள 23 பேர் மனி­த­வள நிர்­வா­கப் பிரிவு வேலை­களுக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­னர். இத்­த­கைய திற­னா­ளர்­களை வேலைக்கு அமர்த்­து­வ­தில் முன்­னோ­டி­க­ளா­கத் திக­ழும் 22 நிறு­வனங்­க­ளுக்கு சிறப்பு அங்­கீ­கா­ரம் அளிக்­கப்­பட்­டது.

வேலைக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட 23 பேருக்­கும் 576 மணி நேரம் பயிற்சி அளிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது.

உடற்­கு­றை­யுள்­ளோர் வேலை­இடத்­தில் பழக சிறிது காலம் பிடிக்­க­லாம் என்று கூறிய திரு­வாட்டி ஹலிமா, வேலை­யி­டங்­கள் இதன் தொடர்­பில் சிறிய மாற்­றங்­களைச் செய்­வ­தற்கு அர­சாங்­கத்­தின் உத­வித் திட்­டங்­கள் இருப்­பதை நினை­வு­ப­டுத்­தி­னார்.

வேலையிடங்கள் இதற்காகச் செய்யும் செலவில் 90 விழுக்காடு வரை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்பதை அவர் சுட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!