மின்னிலக்க நாணய விரைவுப் பரிவர்த்தனை குறித்த உலகளாவிய முயற்சி

சிங்­கப்­பூர், பிரான்ஸ், சுவிட்­சர்­லாந்து ஆகிய நாடு­கள் இணைந்து உல­க­ளா­விய மின்­னி­லக்க நாண­யப் பரி­வர்த்­த­னையை விரை­வா­க­வும் பாது­காப்­பா­க­வும் மேற்­கொள்ள உத­வும் புதிய திட்­டத்­தைத் தொடங்கி உள்­ளன.

'புரொ­ஜெக்ட் உபின்+' என்­பது இதன் பெயர். இம்­மூன்று நாடு­களின் மத்­திய வங்­கி­கள் வெளி­யிடும் மின்­னி­லக்க நாண­யங்­க­ளைப் பயன்­ப­டுத்தி செய்­யப்­படும் பரி­வர்த்­த­னை­கள் குறித்து இதில் ஆரா­யப்­படும். மூன்று நாடு­க­ளின் மத்­திய வங்கி­க­ளோடு அனைத்­து­லக ஒப்­பந்­தப் புத்­தாக்க நடு­வத்­திற்­கான வங்­கி­யும் இம்­மு­யற்­சி­யில் பங்­கு­பெ­றும்.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் 'ஸ்வி­ஃப்ட்' எனப்­படும் வங்­கி­களுக்கு இடை­யி­லான தக­வல் கட்­ட­மைப்­பு­டன் இணைந்து வெவ்­வேறு செயல்­பாட்டு மாதி­ரி­கள் குறித்து ஆரா­யும் என்று கூறப்­பட்­டது.

தானி­யக்க முறை­யில் உட­ன­டிப் பரி­வர்த்­தனை நடை­பெ­று­வ­தன் சாத்­தி­யம் குறித்­தும் ஆரா­யப்­படும்.

இந்த ­மு­யற்­சிக்­கான உள்­கட்­ட­மைப்பு, தொழில்­நுட்­பத் தர­நிலை ஆகி­ய­வற்றை உரு­வாக்­குவதும் 'புரொ­ஜெக்ட் உபின்+' திட்­டத்­தின் இலக்கு­களில் அடங்­கும்.

சிங்­கப்­பூர் எக்ஸ்­போ­வில் நேற்று நடை­பெற்ற சிங்­கப்­பூர் நிதித் தொழில்­நுட்ப விழா­வில் உரை­யாற்­றிய சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத் தலை­வர் ரவி மேனன் இந்­தத் தக­வல்­களை வெளி­யிட்­டார்.

2016ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்ட 'புரொ­ஜெக்ட் உபின்' திட்­டத்­தின் வெற்­றி­யைத் தொடர்ந்து அதன் விரி­வாக்­க­மாக 'புரொ­ஜெக்ட் உபின்+' திட்­டம் அமைகிறது என்றும் பாது­காப்­பா­க­வும் இடை­யூறு இன்­றி­யும் பரி­வர்த்­த­னை­களை மேற்­கொள்ள இத்­திட்­டம் கைகொ­டுக்­கும் என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!