வெளிநாட்டு மாணவர்கள் தங்குமிடம் பற்றாக்குறை

சிங்­கப்­பூ­ரில் தங்கி பட்­டக் கல்வி பயி­லும் சில வெளி­நாட்டு மாண­வர்­க­ளுக்கு இங்கு தங்­கு­மி­டம் கிடைப்­ப­தில் சிர­மம் ஏற்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக மாண­வர் பரி­மாற்­றத் திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூ­ருக்கு வரும் வெளி­நாட்டு மாண­வர்­கள் சிலர் இப்­பி­ரச்­சி­னையை எதிர்­கொள்­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

உதா­ர­ணத்­துக்கு, சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் (என்­யு­எஸ்) மாண­வர் விடு­தி­யில் இடம் கிடைக்­கா­த­தால் வேறு இடங்­களில் தங்­கும் நிலை சில­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் வாடகை அதி­க­மாக இருப்­ப­தால் அதைச் சமா­ளிக்க முடி­ய­வில்லை என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் சில மாண­வர்­கள் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

பிரிட்­ட­னின் வார்­விக் பல்

­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த அனைத்­து­லக நிர்­வாக மாண­வ­ரான திரு அண்­டோ­னியோ லொபெக்­கிற்கு என்­யு­எஸ் மாண­வர் விடு­தி­யில் இட­ம் கிடைக்­க­வில்லை.

இத­னால் மாதத்­துக்கு $1,100 வாட­கைப் பணம் கொடுத்து வேறோர் இடத்­தில் அவர் தங்­கி­னார். ஆனால் அந்­தச் செலவை அவ­ரால் சமா­ளிக்க முடி­யா­த­தால் 12 நாள்­க­ளுக்கு அவர் மலே­சி­யா­வில் தங்­கி­னார்.

இத­னால் அவ­ரால் வகுப்­பு­க­ளுக்­குச் செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டது. என்­யு­எஸ் மாண­வர் விடு­தி­யின் மாதாந்­திர வாடகை $480க்கும் $850க்கும் இடைப்­பட்­டது.

கட்­டுப்­ப­டி­யா­ன விலை­யில் தங்கு ­மி­டம் கிடைக்­கா­த­தால் நிர்­ண­யிக்­கப்­பட்ட கால­கட்­டத்­துக்கு முன்­பா­கவே பல வெளி­நாட்டு மாண­வர்­கள் சொந்த நாடு திரும்­பு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே, ஒவ்­வோர் ஆண்­டும் அனைத்­து­ல­கப் பரி­மாற்­றத் திட்­டத்­தின்­கீழ் 2,300க்கும் மேற்­பட்ட வெளி­நாட்டு மாண­வர்­களை வர­வேற்­ப­தாக என்­யு­எஸ் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!