துணைப் பிரதமர் வோங்: மலாய்/முஸ்லிம் சமூகம் மேம்பட முக்கியப் பங்காற்றும் பெரித்தா ஹரியான்

எல்லா நிலை­க­ளி­லும் மலாய்/முஸ்­லிம் சமூ­கத்­தி­ன­ரின் நல்­வாழ்வை மேம்­ப­டுத்­து­வ­தில் பெரித்தா ஹரி­யான் நாளி­தழ், மெண்­டாக்கி போன்ற அமைப்­பு­கள் முக்­கி­யப் பங்­காற்றி வரு­வ­தாக துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

மலாய்/முஸ்­லிம் சமூ­கத்­திற்கு ஆத­ர­வ­ளிக்­க­வும் கைதூக்­கி­வி­ட­வும் அச்­ச­மூ­கத்­தைச் சேர்ந்த பல நிறு­வ­னங்­கள், அர­சாங்­கத்­து­டன் அணுக்­க­மாக இணைந்து செயல்­பட்டு வரு­கின்­றன என்று திரு வோங் கூறி­னார்.

ஃபோர் சீசன்ஸ் ஹோட்­ட­லில் நேற்று முன்­தி­னம் மாலை இடம்­பெற்ற 'பெரித்தா ஹரி­யான் சாத­னை­யா­ளர் விரு­து­கள் 2022' விழா­வில் திரு வோங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார்.

மலாய்/முஸ்­லிம் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் தங்­கள் துறை­களில் புரிந்த சாத­னை­க­ளை­யும் பங்­க­ளிப்­பு­க­ளை­யும் அங்­கீ­க­ரிக்­கும் வித­மாக ஆண்­டு­தோ­றும் இந்த நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்டு வரு­கிறது.

"மலாய்/முஸ்­லிம் சமூ­கத்­தில் பலர் இப்­பொ­ழுது கல்­வி­யி­லும், வேலை­க­ளி­லும் சிறந்த தேர்ச்சி பெறு­கி­றார்­கள். ஒரு­வ­ரால் தனி­யாக நின்று வெற்­றி­காண முடி­யாது, ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் ஆத­ரவு அளிப்­பது அவ­சி­யம். பெரித்தா ஹரி­யான் போன்ற நிறு­வ­னங்­கள் மலாய்/முஸ்­லிம் சமூ­கத்­தின் நல்­வாழ்வை வெகு­வாக மேம்­ப­டுத்­தி­யுள்­ளது," என்று துணைப் பிர­த­மர் பேசி­னார்.

"அர­சாங்­கத்­தின் உத­வி­யால் மெண்­டாக்கி போன்ற பல மலாய்/முஸ்­லிம் அமைப்­பு­கள் சமூ­கத்­திற்­குப் பல வழி­க­ளி­லும் ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றன. மலாய் மொழி­யை­யும் கலா­சா­ரத்­தை­யும் பாது­காத்து வரும் பெரித்தா ஹரி­யான், மலாய்/முஸ்­லிம் சமூ­கத்­தைக் கட்­டிக்­காத்து வரு­கிறது. அது­போல, வரும் தலை­மு­றை­யி­னரையும் ஊக்­கு­வித்து வளர்ச்­சி­ய­டையச் செய்­வோம்," என்­றார் அவர்.

தங்­கள் துறை­களில் முத்­திரை பதித்த 31 வய­துக்­கும் மேற்­பட்­டோ­ருக்கு, இவ்­வாண்­டின் சாத­னை­யா­ளர் விருது வழங்­கப்­பட்­டது. சாதிப்­ப­தற்­கான வேட்­கை­யும் சமு­தா­யத்­திற்­குத் திருப்பி அளிக்க வேண்டு­மென்ற எண்­ண­மும் கொண்ட 30 வய­துக்­கும்­கீழ் உள்­ள­வ­ருக்கு இளம் சாத­னை­யா­ளர் விருது வழங்­கப்­பட்­டது. அத்­து­டன், பெரித்தா ஹரி­யான் நாளி­த­ழின் 65வது ஆண்­டு­நி­றைவை முன்­னிட்டு, வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விரு­தும் வழங்­கப்­பட்­டது.

பெரித்தா ஹரி­யான் சாத­னை­யா­ளர் விருது 64 வய­தான ஹடிஜா ரஹ்­மாட்­டுக்­குக் கிடைத்­தது. தேசிய கல்­விக் கழ­கத்­தில் இணைப் பேரா­சி­ரி­ய­ரா­க­வும் ஆசிய மொழி­கள், கலா­சா­ரங்­கள் கல்­வி­சார் குழு­வின் தலை­வ­ரா­க­வும் இருக்­கும் அவர், இரு­மொழி எழுத்­தா­ள­ரும்­கூட.

இளம் சாத­னை­யா­ளர் விருது 30 வய­து லீ ஷபிக் முஹ­மட் ரிட்­சு­வன் லீக்கு வழங்­கப்­பட்­டது. தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் பயின்ற அவர், சிங்­கப்­பூ­ரி­லி­ருக்­கும் பெரிய உண­வகங்­களில் சமை­யல்­கா­ர­ரா­கப் பணி­பு­ரிந்­துள்­ளார்.

வாழ்­நாள் சாத­னை­யா­­ளர் விருதை திரு முஹ­மட் நூர் முஹ­மட் யூசோஃப், 85, பெற்­றுக்­கொண்­டார். தென்­கி­ழக்கு ஆசிய மலாய்ப் பாடல்­க­ளுக்கு இவரை ஒரு முன்­னோடி என்று சொன்­னால் அது மிகையாகாது.

தொடக்­கப் பள்ளி, உயர்­நி­லைப் பள்ளி பாடத் திட்­டத்­திற்­கும் இஸ்­லா­மிய சம­யக் கல்­வி­ய­றிவு பாடத்­திட்­டத்­துக்­கும் பல கல்வி சார்ந்த தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களை உரு­வாக்­கி­ய­தோடு, கல்வி அமைச்­சுப் பாட­நூல்­க­ளை­யும், மலாய் இசை, பொழு­து­போக்கு ஆளு­மை­க­ளைப் பற்­றி­ய புத்­த­கங்­க­ளை­யும் அவர் எழு­தி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!