மரண விசாரணை அதிகாரி: ஹவ்காங் முதியவரின் மரணம் சந்தேகத்துக்குரியது; ஆனால் காரணம் விளங்கவில்லை

கடந்த ஜன­வரி மாதம் ஹவ்­காங்­கில் உள்ள வடி­கா­லில் மாண்டு கிடக்­கக் காணப்­பட்­டார் 80 வயது வில்­லி­யம் லெக் ஸ்வெ சுவா.

அவ­ரது மர­ணம் சந்­தே­கத்­துக்­கு­ரிய முறை­யில் நிகழ்ந்­தி­ருப்­ப­தா­க­வும் ஆனால் அதற்­கான கார­ணம் விளங்­க­வில்லை என்­றும் மரண விசா­ரணை அதி­காரி அறி­வித்­துள்­ளார்.

ஜன­வரி 1ஆம் தேதி வீட்­டில் இருந்து வெளியே சென்ற முதி­ய­வர் லெக்­கைப் பிறகு காண­வில்லை. ஜன­வரி 3ஆம் தேதி இரவு 7.10 மணி­ய­ள­வில், எண் 42 டெஃபு லேன் 7க்கு அருகே உள்ள கால்­வா­யின் உலோ­கக் கிரா­தி­யில் சிக்­கிய நிலை­யில் அவ­ரது சட­லம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அதே­நா­ளில் மாலை 4.30 மணி­அ­ள­வில் அந்­தப் பகு­தி­யில் உள்ள கார் நிறுத்­து­மி­டத்­தில் அவர் நுழை­வதை கண்­கா­ணிப்­புக் கேம­ராப் பதி­வு­கள் காட்­டு­கின்­றன.

திரு லெக் நினை­வாற்­றல் குறை­பாட்­டால் பாதிக்­கப்­பட்­ட­வர் என்­று மரண விசா­ரணை அதி­காரி ஆதம் நகோடா தமது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

மாண்ட முதி­ய­வ­ரின் உட­லில் வெளிப்­ப­டை­யான காயங்­கள் ஏதும் காணப்­ப­ட­வில்லை. அவர் அதீத பயத்­தில் இருந்­த­தா­க­வும் தெரி­ய­வில்லை.

தவறு ஏதும் நடந்­தி­ருப்­ப­தா­கக் காவல்­து­றை­யி­ன­ரும் சந்­தே­கிக்­க­வில்லை.

முதி­ய­வ­ரின் சட­லம் அழு­கிய நிலை­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தால், அவ­ரது மர­ணத்­துக்­கான கார­ணத்தை இன்­னது எனத் தெளி­வா­கக் குறிப்­பிட இய­ல­வில்லை என்று மரண விசா­ரணை அதி­காரி விளக்­கிக் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!