பரிவுமிக்க பயணிகள் விருது எட்டு பேருக்குக் கிடைத்தது பொதுப் போக்குவரத்தில் மற்றவர்களுக்கு உதவியதற்காகச் சிறப்பிப்பு

பொதுப் போக்­கு­வ­ரத்­தில் மற்­ற­வர்­களுக்கு உத­வி­ய­தற்­காக நேற்று எட்­டுப் பய­ணி­க­ளுக்கு விருது வழங்­கிச் சிறப்­பிக்­கப்­பட்­டது. பரி­வு­மிக்க பய­ணி­கள் விருது 2019ல் தொடங்­கப்­பட்­டது.

இப்­போது நான்­கா­வது ஆண்­டாக அந்த விருது வழங்­கப்­பட்டு இருக்­கிறது. பொதுப் போக்­கு­வரத்­தில் பரி­வு­மிக்க நடத்­தை­யைக் கடைப்­பி­டிக்­க­வும் அதை மேம்­படுத்­த­வும் ஊக்­க­மூட்­டு­வ­தற்­காக அந்த விரு­துத் திட்­டம் தொடங்­கப்­பட்­டது.

அதோடு மட்­டு­மின்றி, அத்­த­கைய நடத்­தை­ பற்றிய புரிந்­துணர்வை மேம்­ப­டுத்­து­வ­தும் அந்த விரு­தின் நோக்­கம்.

பொதுப் போக்­கு­வ­ரத்­தில் மயங்கி விழுந்­து­விட்ட ஒரு­வ­ருக்குச் செயற்கை சுவா­சம் அளித்து உதவிய ராண்டி லிம், சான் யார்ன் கிட் என்ற இரு­வ­ருக்குத் தனிச்­சிறப்­பு­மிக்க பரி­வு­டன் கூடிய பய­ணிக்­கான ரிச்­சர்ட் மேக்­னஸ் விருது வழங்­­கப்­பட்­டது.

இதர ஆறு பேருக்­கும் பாராட்டு விருது கிடைத்­தது. விருது வழங்­கும் நிகழ்ச்சி தோ பாயோ வீவக மைய அரங்­கில் நடந்­தது.

அந்த விரு­துக்­காக இந்த ஆண்டு 65 பரிந்­து­ரை­கள் அனுப்­பப்­பட்டு இருந்­தன.

'பொதுப் போக்­கு­வ­ரத்து ஊழி­யர் பாராட்டு விழா' என்ற அந்த நிகழ்ச்­சி­யில் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு பரி­வு­மிக்க பய­ணி­கள் வாரம் என்ற இயக்­கத்­தைத் தொடங்­கி­வைத்­தார்.

சென்ற ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் பிரி­வு­மிக்க பயணி விரு­துக்கு கிட்­டத்­தட்ட இரண்டு மடங்கு அதிக பரிந்­து­ரை­கள் வந்­தி­ருப்­பதை அமைச்­சர் ஈஸ்வரன் சுட்­டினார்.

போக்குவரத்து அமைச்சர், நிகழ்ச்­சி­யில் 12 ஊழி­யர்­க­ளுக்­குப் பாராட்டுச் சான்­றி­தழ் வழங்­கிச் சிறப்­பித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!