அரசாங்க வீடுகள்: நட்டத்தை லாபமாக்கும் தேசிய உறுதிப்பாடு முரசொலி

சிங்­கப்­பூர் சுதந்­தி­ரம் பெற்­ற­போது அத­னி­டம் எதுவுமே இல்லை. நில­வ­ளம், இயற்கை வளங்­கள் கிடையாது. அதற்கு என்று சொந்­த­மாக மக்­கள்­கூட இல்லை. அப்­போதைய அதன் மக்களில் பெரும் பாலா­ன­வர்­கள் குடி­யே­றி­க­ளா­கத்­தான் இருந்­தார்­கள்.

நாட்­டின் ஒரே சொத்­தாக இருந்­தது அந்த மக்­கள்­தான். அந்­தச் சொத்தை வலு­வான, நிரந்­த­ரமான ஐக்கிய சுவ­ராக ஆக்கினால்­தான் அதை அடிப்­படை­யா­கக்கொண்டு தேசிய சித்­தி­ரத்தை வரைய முடி­யும் என்ற நிலை. சிங்­கப்­பூரை ஒரு நாடா­கக் கட்டி எழுப்ப வேண்­டு­மென்­றால் மக்­கள் சொத்தை சொந்த தேசிய சொத்­தாக ஆக்­கிக்­கொள்ள வேண்டிய கட்­டா­யம் நாட்­டிற்கு இருந்­தது.

இதைச் சாதிக்­க­வேண்­டு­மா­னால் குடியேறி மக்­களை நாட்டு குடி­மக்­க­ளாக இங்­கேயே வேர் ஊன்றச் செய்ய வேண்டும். அவர்­க­ளுக்­குக் கண்­கூ­டான, அசையாச் சொத்தை உரு­வாக்­க­வேண்­டும். அதுதான் அவர்­கள் இங்கேயே வேர் ஊன்ற வழி­வ­குக்­கும்.

சிறிய நாடான சிங்­கப்­பூ­ரில் அத்­த­கைய சொத்து, மக்­கள் நிரந்­த­ர­மா­கக் குடி இருப்­ப­தற்­கான வீட்டு வடி­வில்­தான் இருக்க முடி­யும், இருக்­க­வேண்­டும் என்று முன்­னோ­டித் தலை­வர்­கள் முடிவு செய்­தனர்­.

வீட்­டு­டை­மையே நாட்­டு­டைமை என்ற உணர்வை வலு­வாக்­கும் என்­ப­தால் இந்த தேசிய இலக்கை நிறை­வேற்ற 1960ஆம் ஆண்­டில் தோற்­று­விக்­கப்­பட்­ட­து­தான் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம்.

அர­சாங்க வீடு­கள் மக்­க­ளுக்­குத் தாக்­குப் பிடிக்கக்­கூ­டி­ய­வை­யாக, கைக்கு எட்­டக்­கூ­டி­யவை யாக, எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கு­ப­வையாக இருக்­க­வேண்­டும் என்ற கடப்­பாட்டை நிறை­வேற்ற இந்­தக் கழ­கம் உறு­தி­பூண்­டது.

அந்த உறு­தியில் இன்­றுவரை கொஞ்­சம்­கூட தளரா­மல் கழ­கம் பாடு­பட்டு வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உல­கத் தரம் அள­வுக்கு வீடு­களை உரு­வாக்­கித் தரு­வ­தில் ஆண்­டாண்டு களாக பல்­வேறு திட்­டங்­கள், செயல்­திட்­டங்­கள் மூலம் இமா­லய சாத­னை­களைக் கழகம் சாதித்து உள்­ளது, தொடர்ந்து சாதித்து வரு­கிறது.

சிங்­கப்­பூரர்­கள் இன்று சொந்­த­மா­கக் கொண்டு உள்ள வீடு­கள் உலக அள­வில் பெரும் மதிப்பு மிக்­கவை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இருந்­தா­லும் அர­சாங்­கத் தரப்­பில் மக்­க­ளுக்கு அத்தகைய வீடு­க­ளைக் கட்­டிக்­கொ­டுப்­ப­தில் கழகம் ஒரு­போதும் லாபம் ஈட்­டி­ய­தில்லை. தொடக்­கம் முதலே ஒவ்­வோர் ஆண்­டும் கழ­கத்­திற்கு நட்­டம்­தான். இந்த நட்­டத்தை மானி­யம் மூலம் நிதி அமைச்சு ஈடு­செய்து வரு­கிறது. இதன் கார­ண­மாக கழ­கம் தொடர்ந்து செயல்­பட வழி­கோ­லப்­ப­டு­கிறது.

கழ­கம் தோற்­று­விக்­கப்­பட்ட ஆண்டு முதல் இன்று­வரை அது மொத்­தம் $42.97 பில்­லி­யன் மானி­யத்தை நிதி அமைச்­சி­டம் இருந்து பெற்று இருக்­கிறது. பார்க்­கப்­போ­னால் அத­னு­டைய இந்த மானியம் ஒவ்­வோர் நிதி ஆண்­டுமே அதி­க­ரித்து வரு­கிறது.

அதா­வது ஆண்­டு­தோ­றும் இழப்பு ஏற்­பட்­டா­லும் தன் கட­மையை நிறை­வேற்­று­வ­தில் கழ­கம் நிதி அமைச்­சின் ஆத­ர­வு­டன் உறு­தி­யா­கச் செயல்­பட்டு வரு­கிறது.

கொரோனா கிருமி பெரி­ய­ள­வில் தலை­யெ­டுத்த கார­ணத்­தால் கட்­டு­மா­னப் பணி­கள் தடை­பட்­டன.

இதன்­ கா­ர­ண­மாக 2020-2021ஆம் நிதி ஆண்டில் மட்­டும் அதற்கு முந்­திய ஆண்­டை­விட குறை­வாக நிதியை அமைச்­சி­டம் இருந்து கழ­கம் மானி­யமாகப் பெற்­றது. அதா­வது 2019-2020ஆம் நிதி ஆண்­டில் கழ­கத்­திற்கு $2.66 பில்­லி­யன் மானி­யம் கிடைத்­தது. இது, அடுத்த நிதி ஆண்­டில் $2.34 பில்­லி­ய­னா­கக் குறைந்­தது.

இது தவிர இதர எல்லா ஆண்­டு­க­ளி­லுமே கழகம் பெற்று வந்த இழப்புகள்-பாற்றாக்குறை நிதி அமைச்சு மூலம் ஈடு­செய்­யப்­பட்டு வந்­துள்­ளன.

இந்த நிலை­யில், கடந்த மார்ச் 30ஆம் தேதி முடி­வுற்ற நிதி­யாண்­டில் கழ­கத்­திற்கு ஏற்­பட்ட பற்­றாக்­குறை இது­வரை ஒரு போதுமே ஏற்­ப­டாத வகையில் சாதனை அள­வாக $4.367 பில்­லி­ய­னாக அதா­வது 86 விழுக்­காடு அதி­க­ரித்­து­விட்­டது.

இது அதற்கு முந்­திய ஆண்­டில் $2.346 பில்­லி­ய­னாக இருந்­தது.

கட்­டப்­பட்டு வரு­கின்ற வீடு­கள் மூலம் ஏற்­படும் என்று எதிர்­பார்க்­கப்­படும் இழப்­பு­கள், விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்ற மத்­திய சேம நிதி வீட்டு மானி­யங்­கள், வீட்டு உடை­மைத் திட்­டத்­தின்­கீழ் வீடு­கள் மானி­யத்­து­டன் விற்­கப்­ப­டு­வ­தால் ஏற்­ப­டக்­கூ­டிய மொத்த இழப்பு ஆகி­ய­வற்றைக் கணக்­கிட்டால் இந்த இழப்­பு­கள் மட்­டும் $3.85 பில்­லி­ய­னாக இருந்­தன.

அர­சாங்க வீடு­கள் மக்­க­ளுக்­குத் தாக்­குப் பிடிக்­கக்­கூ­டி­ய­வை­யாக, கைக்கு எட்­டக்­கூ­டி­ய­வை­யாக, எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கு­ப­வையாக இருக்­க­வேண்டும் என்ற கடப்­பாட்டை நிறை­வேற்ற வேண்­டும் என்ற கழ­கத்­தின் நோக்­கம் இன்­றும் பொருத்­த­மான ஒன்றாக இருக்­கிறது.

சுதந்­தி­ரம் பெற்ற காலத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் சிங்­கப்­பூர் எவ்­வ­ளவோ மேம்­பட்டு இப்­போது செல்­வச்­செ­ழிப்­பான நாடா­கத் திகழ்­கிறது.

அத்­த­கைய செல்­வச்­செ­ழிப்­பின் அடை­யா­ள­மாக மிக அதிக விலை­யுள்ள தனி­யார் வீடு­கள் கட்டப்பட்டு வானுயர்ந்து நிற்கின்றன. தொடர்ந்து கட்டப்பட்டும் வருகின்றன.

சிங்­கப்­பூ­ரில் சட்ட ஏற்­பாட்டு முறை­கள் ஒளிவு­மறைவு இல்­லா­மல் உறு­தி­யாக, நிலையாக இருந்து வரு­வ­தால் நாட்டின் சொத்­துத் துறை உல­க­ள­வில் கவர்ச்­சி­க­ர­மா­ன­தாக இருக்­கிறது. உலக நாட்­டி­னர் சிங்­கப்­பூர் வீடு­களில் முத­லீடு செய்­கி­றார்­கள். இதர முத­லீட்­டா­ளர்­களும் இங்கு வரு­கி­றார்­கள்.

இத்­த­கைய சூழ்­நி­லை­யி­லும்­கூட அர­சாங்க வீடுகள் நல்ல உல­கத் தரத்­து­டன் இருந்­து­வர வேண்டும் என்ற தேவை­யில் கொஞ்­சம்­கூட குறைவு ஏற்­ப­டக்­கூ­டாது என்பது கட்டாயமானதாகும்.

சிங்­கப்­பூ­ரர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் வீவக அடுக்­கு­மாடி வீடு­க­ளில்­தான் வாழ்­கி­றார்­கள்.

தனி­யார் கட்டி எழுப்­பும் வீடு­க­ளு­டன் ஒப்­பி­டக்­கூ­டிய அள­வுக்கு நம்­மு­டைய வீடு­களும் இருக்க வேண்­டும் என்ற எதிர்­பார்ப்பு வீவக குடி­யி­ருப்­பாளர்­க­ளி­டையே அதி­க­ரித்து வரு­கிறது.

இதைக் கருத்­தில்­கொண்டு கழ­கம் அந்த எதிர்­பார்ப்பை நிறை­வேற்ற முயற்­சி­களை முடுக்­கி­விட்டு வரு­கிறது.

இந்த முயற்­சிக்குப் பெரும் பணம் தேவைப்­ப­டு­கிறது. என்­றா­லும்­கூட அந்­தப் பணம் நல்ல ஒரு நோக்­கத்­திற்­காக செல­வி­டப்­படும் ஒன்­றாக இருப்­ப­தால் கழ­கத்­திற்கு ஆண்­டு­தோ­றும் ஏற்­பட்டு வரக்­கூ­டிய இழப்­பு­கள் ஓர் இழப்­பா­கத் தெரி­ய­வில்லை.

அதற்குப் பதி­லாக அந்த இழப்­பு­கள் சிங்­கப்­பூரில் இடம்­பெ­றும் நற்­ப­லன் தரக்­கூ­டிய தேசிய அள­விலான முத­லீ­டா­கவே இருக்­கிறது.

கழ­கம் நட்­டம் ஈட்­டி­னா­லும் முடி­வில் நாட்­டிற்கு லாபமே ஏற்­ப­டு­கிறது என்­பது ஆக்­க­க­ர­மான ஒரு சூழ­லா­கப் பரிணமித்து தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!