நேரடி விவாதம்: பிரான்சன் மறுப்பு பற்றி அமைச்சு கருத்து

சிங்­கப்­பூ­ரில் நடப்­பில் உள்ள மரண தண்­டனை தொடர்பில் நேர­டி­யாக தொலைக்­காட்­சி­யில் விவா­திக்க வரும்­படி பிரிட்­ட­னின் கோடீஸ்­வ­ரர் ரிச்­சர்ட் பிரான்­சனுக்கு சிங்­கப்­பூர் அழைப்பு விடுத்தது. ஆனால் அவர் அதை மறுத்துவிட்­டார்.

இதற்கு அவர் தெரி­வித்து இருக்­கும் கார­ணங்­கள் நியா­ய­மா­ன­வை­யா­கத் தெரி­ய­வில்லை என்று வெளி­யு­றவு அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

மேலே அமர்ந்­து­கொண்டு எதை­யா­வது சொல்­லி­விட்டு பிறகு சொன்­னதை மெய்ப்­பிக்க வரும்­படி அழைக்­கும்­போது அதை மறுத்து­வி­டு­வது என்­பது திரு பிரான்­சன் யாருக்­காக குரல் கொடுக்­கி­றாரோ அவர்­க­ளுக்கோ அவர்­களின் கோட்­பாட்­டுக்கோ மதிப்பு மரி­யா­தையை ஏற்­ப­டுத்­தும் ஒன்றா­கத் தெரி­ய­வில்லை என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

தன் கருத்­து­களை முற்­றி­லும் விளக்­கு­வ­தற்கு அனைத்து வாய்ப்பு­க­ளை­யும் திரு பிரான்­சனுக்கு வழங்கத் தோதாக சிங்­கப்­பூர் அர­சாங்­கம் திரு பிரான்­சனுக்கு தொலைக்­காட்சி விவாத வாய்ப்­­பைக் கொடுத்­தது என்­பதை அமைச்சு சுட்­டி­யது.

சிங்­கப்­பூ­ரின் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­கத்­து­டன் நேர­டி­யாக தொலைக்­காட்­சி­யில் விவா­திக்க வரும்­படி விடுக்­கப்­பட்ட அழைப்­பை, வெர்­ஜின் நிறு­வ­னங்­கள் குழு­மத்­தின் தலைவ­ரான திரு பிரான்­சன் கடந்த திங்­கட்­கி­ழமை மறுத்­து­விட்­டார்.

தனக்­குப் பதி­லாக சிங்­கப்­பூரர்­களை ஈடு­ப­டுத்தி மரண தண்டனை தொட­ர்பி­லான விவா­தத்தை நடத்தலாம் என்று அவர் யோசனை தெரி­வித்­தார்.

இதை ஏற்­கெனவே பரந்த அள­வில் சிங்­கப்­பூர் செய்­தி­ருப்­ப­தா­கத் தெரி­வித்த அமைச்சு, மரண தண்­ட­னைக்குச் சிங்­கப்பூரர்­கள் மிகப்­பெ­ரும்­பான்மை ஆத­ரவு அளித்து இருப்­ப­தைச் சுட்­டி­காட்டியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!