$7மி. வெகுமதி அறிவித்து அமெரிக்காவில் தேடப்பட்டு வருபவர் சிங்கப்பூரில்

அமெரிக்காவில் 5 மில்லியன் டாலர் வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டுவரும் சிங்கப்பூர் வர்த்தகர் சிங்கப்பூரில் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவெக் கீ செங், 62, என்பவர் வடகொரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளை மீறியதற்கான குற்றச்சாட்டை அமெரிக்காவில் எதிர்நோக்குகிறார். அவர் ஸ்வான்சீஸ் போர்ட் சர்வீசஸ் எனும் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளர்.

அவரை அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை தேடி வருகிறது.

குவெக் சிங்கப்பூரில்தான் இருக்கிறார் என்று உறுதிப்படுத்திய சிங்கப்பூர் காவல்துறை, அவரை வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு விசாரித்து வருவதாகத் தெரிவித்தது. சிங்கப்பூரின் அனைத்துலக நாட்டு சட்டத்தின் (2001) கீழ் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. அவருடைய கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவல்கள் அமெரிக்காவின் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை குறிப்பிட்டது.

2019ல் குவெக் எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்றை வாங்கி, அதன் வழி 2.8 மில்லியன் கிலோகிராம் எண்ணெய்யை வடகொரியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்பட்டது.
தடைகளை மீறியதற்காகவும், பண மோசடியில் ஈடுபட்டதற்காவும் குவெக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்றாண்டு ஏப்ரலில் குவெக்கை தேடப்பட்டு வருபவராக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை அறிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!