மசெக மாநாட்டில் பிரதமர் லீ உரை முக்கிய பிரச்சினைகளில் பதுங்கும் எதிர்க்கட்சிகள்

ஆண்­க­ளுக்கு இடை­யி­லான பாலி­யல் உறவு சட்­டப்­படி குற்­றம் என்று கூறும் சட்­டப்­பி­ரிவு 377ஏ-யை ரத்து செய்­வது போன்ற பிரச்­சி­னை­யான விவ­கா­ரங்­கள் எழும்­போது எதிர்க்­கட்­சி­கள் காணா­மல் போய்­வி­டு­வ­தாக பிர­த­மர் லீ சியன் லூங் விமர்­சித்­துள்­ளார்.

நேற்று நடை­பெற்ற மக்­கள் செயல் கட்­சி­யின் மாநாட்­டில் பிர­த­மர் லீ உரை­யாற்­றி­னார். நாடா­ளு­மன்­றத்­தில் கூடு­தல் இடங்­களில் வெற்றி பெற்று ஒரு நாள் அர­சாங்­கத்தை அமைக்­கும் இலக்கு எதிர்க்­கட்­சி­க­ளுக்கு இருந்­தால், அவை ஒதுங்கி மறைந்துகொள்ள முடி­யாது என்று குறிப்­பிட்­டார்.

சட்­டப்­பி­ரிவு 377ஏ உள்­ளிட்ட சிக்­க­லான விவ­கா­ரங்­களில் அர­சாங்­கம் பிரச்­சி­னையை மதிப்­பிட்டு, வாதங்­க­ளைச் சீர்­தூக்கி, தனக்கு இயன்­ற­வரை தெரிந்­த­படி செல்­லும் சரி­யான பாதை­யைத் தீர்­மா­னிக்க வேண்­டி­யுள்­ளது என்­றார் பிர­த­மர்,

இவ்விவ­கா­ரத்­தில் எதிர் எதிர் கருத்­து­க­ள் உள்ள குழுக்­களை அமைச்­சர்­கள் கா. சண்­மு­கம், மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி, எட்­வின் டோங், டெஸ்­மண்ட் லீ உள்­ளிட்­ட­வர்­கள் பல மாதங்­க­ளா­கச் சந்­தித்து உரை­யா­டி­ய­தாக திரு லீ கூறி­னார்.

"அவர்­கள் கவ­ன­மா­கக் கருத்­து­க­ளைக் கேட்­ட­றிந்து, பொறு­மை­யாக விளக்­க­ம­ளித்­த­னர். இத்­த­கைய விவ­கா­ரத்­தில் அனை­வ­ரும் விட்­டுக்கொடுத்­தாக வேண்­டும் என்று எல்­லாத் தரப்­பு­க­ளை­யும் ஏற்­றுக்­கொள்ள வைத்­த­னர். எந்­த­வொரு தரப்­புக்­கும் கேட்­ட­தெல்­லாம் கிடைக்­க­வில்லை.

சட்­டப் பிரிவு 377ஏ விவ­கா­ரத்­தில் எதிர்க்­கட்­சி­கள் எங்கே தென் படு­கின்­றன? அவை அர­சாங்­கத்­தின் அணு­கு­மு­றையை விமர்­சிக்­கின்­ற­னவா? அர­சாங்க நட­வ­டிக்­கையை ஆத­ரிக்­கின்­ற­னவா அல்­லது எதிர்க்­கின்­ற­னவா? மாற்­றுத் திட்­டங்­களை முன்­வைத்­துள்­ள­னவா? இவற்­றில் எது­வும் இல்லை," என்­றார் பிர­த­மர்.

யாரை­யும் பகைத்­துக்கொள்ள விரும்­பா­த­தால் எதிர்க்­கட்­சி­கள் பதுங்கி விட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டார். சிங்­கப்­பூரை நிர்­வ­கிக்க விரும்­பி­னால் அவ்­வாறு மறை­வாகி விட முடி­யாது என்­றார் அவர்.

அதே நேரம் அர­சி­யல் லாபத்­துக்­காக மனக்­க­சப்­பைத் தூண்­டும் அர­சி­யல்­வா­தி­களும் அர­சி­யல் கட்­சி­களும் மிகப் பெரும் கவலை அளிப்­ப­தாக திரு லீ சொன்­னார்.

"குடி­யி­ருப்­பா­ளர்-வெளி­நாட்ட வர், குடி­மக்­கள்-நிரந்­த­ர­வா­சி­கள், பல­கா­லம் முன்பு குடி­யு­ரிமை பெற்­ற­வர்-புதி­தா­கக் குடி­யு­ரிமை பெற்­ற­வர் என வேறு­பா­டு­களை அவை தொடர்ந்து பெரி­தாக்­கு­கின்­றன."

சில நேரங்­களில் இனப் பாகு­பாட்டு தொனி­யில் அவை பேசு­கின்­றன. ஒரு குறிப்­பிட்ட வர்த்­தக உடன்­பாடு பற்றி பேசி­னா­லும், உண்­மை­யாக அவை ஒரு குறிப்­பிட்ட இனக்­கு­ழு­வைப் பற்றிப் பேசு­வதாக அவர் கூறி­னார். அக்­கட்­சி­கள் தங்­கள் பேச்­சா­லும் கேள்­வி­க­ளா­லும் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க முனை­வ­தில்லை. மாறாக சமூ­கத்­தைப் பிள­வு­ப­டுத்­து­வதே அவற்­றின் நோக்­கம் என்­றார் திரு லீ.

எதிர்க்­கட்­சி­க­ளின் அத்­த­கைய பொறுப்­பற்ற செயல்­கள் நம் வாழ்க்­கையை எவ்­வி­தத்­தி­லும் மேம்­ப­டுத்­து­வ­தில்லை என்­றும் பிளவை ஏற்­ப­டுத்­தும் அர­சி­யல் மேலோங்­கும்­போது நடப்­பதை வேறு இடங்­களில் நாம் பார்த்­துள்­ளோம் என்­றும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!