தோ பாயோவில் உள்ள காவல்துறை பாதுகாப்பு தளபத்தியம் இடமாறுகிறது

தோ பாயோ லோரோங் நான்­கில் தற்­போது அமைந்­தி­ருக்­கும் காவல்­துறை பாது­காப்­புத் தளபத்தியம் அதே வட்­டா­ரத்­தில் வேறு இடத்­துக்கு மாற­வுள்­ளது. அதன் தற்­போ­தைய வளா­கத்­தில் வீடு­கள் கட்­டப்­ப­ட­வுள்­ளன.

கடந்த 2004ஆம் ஆண்­டி­லி­ருந்து காவல்­துறை பாது­காப்­புக் கட்­டுப்­பாட்­டுத் தளம் 2, தோ பாயோ லோரோங் 4ல் இயங்கி வரு­கிறது.

அவ்­வி­டம் கடந்த 2003லேயே வீட­மைப்­புக்­காக ஒதுக்­கப்­பட்டுவிட்­டது.

அவ்­வி­டம் குறித்து நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யத்­தின் பெருந்­திட்­டத்­தில் மாற்­றம் முன்­மொழி­யப்­பட்டு கடந்த அக்­டோ­பர் 21ஆம் தேதி வெளி­யி­டப்­பட்­டது. அதன்­படி அவ்­வி­டத்­தின் பரப்­ப­ளவு 1.7 ஹெக்­டர் ஆகும்.

இது சுமார் இரண்டு காற்­பந்து திடல்­கள் பெரிது.

வரும் 2024ஆம் ஆண்­டின் முதல் பாதிக்­குள் அந்த வளா­கத்தை இடிக்க வேண்­டி­யி­ருக்­கும் என்று நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் தன்­னி­டம் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் கேள்­வி­க­ளுக்­குப் பதில் அளித்த சிங்­கப்­பூர் காவல் துறை கூறி­யது.

கட்­டுப்­பாட்­டுத் தளம் தோ பாயோ லோரோங் எட்­டுக்கு இட­மா­றும் என்று தள­பத்­தி­யம் கூறி­யது.

காவல்­துறை கட்­டுப்­பாட்­டுத் தள­பத்­தி­யம் எல்லா அமைச்­சர்­கள், இங்கு வருகை தரும் வெளி­நாட்டு முக்­கிய புள்­ளி­கள் ஆகி­யோ­ரின் பாது­காப்­புக்­குப் பொறுப்பு வகிப்­ ப­தாக சிங்­கப்­பூர் காவல்­து­றை­யின் இணையப்பக்கம் கூறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!