சிங்கப்பூரில் ‘ஹிகிகொமொரி’ குறித்த விழிப்புணர்வு

ஆ. விஷ்ணு வர்­தினி

கவ­லைக்­கும் மன அழுத்­தத்­துக்­கும் ஆளா­வோர், வெளி­யு­ல­கில் கால்­வைக்க விரும்­பா­மல் தனி­மையை நாடி வீட்­டி­லேயே முடங்­கிக் கிடக்­க­லாம். ஒரு சிலரோ தொடர்ந்து மிகக் கடு­மை­யான முறை­யில் ஆண்­டு­க­ணக்­கா­கத் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்டு தங்­க­ளுக்­கும் தங்­க­ளின் குடும்­பத்­தா­ருக்­கும் மீளா துய­ரத்­தைத் தரு­வர். இதை ஜப்­பா­னி­யர்­கள் 'ஹிகி­கொ­மொரி' (Hikikomori) எனக் கூறு­வர்.

இந்த 'ஹிகி­கொ­மொரி' போக்­கும் சிங்­கப்­பூர் இளை­ய­ரி­டையே அதி­க­ரித்து வந்த சமூ­கத் தனி­மைப்­பாடு அறி­கு­றி­களும் ஒத்­துப்­போ­வ­தைத் தாம் கவ­னித்­த­தாக 'இம்­பார்ட்' எனும் லாப­நோக்­கற்ற அமைப்­பின் தலைமை நிர்­வாகி திரு நர­சிம்­மன் திவா­சி­க­மணி கூறி­னார்.

எனவே, இதன் தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் அமைப்பு கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று 'ஹோம் அலோன்' என்ற பயி­ல­ரங்கை நடத்­தி­யது.

பயி­ல­ரங்­கில் நான்கு நிபு­ணர்­கள் கலந்­து­கொண்டு தங்­க­ளின் கருத்­து­களை முன்­வைத்­த­னர்.

'ஹிகி­கொ­மொரி'யை, மன­ந­லப் பிரச்­சினை எனக் குறிப்­பி­டு­வ­தை­விட, சமூ­க­வி­யல் கோளாறு என்று குறிப்­பி­ட­லாம் எனக் கூறி­னார், கொன்­சாகா பல்­க­லைக்­க­ழ­கப் பேரா­சி­ரி­யர் முனை­வர் வினேய். பிற மன­ந­லச் சிக்­கல்­க­ளுக்­குத் தீர்­வாக அது நாடப்­ப­டு­கிறது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

மன­ந­லச் சிக்­கல்­கள் சில வேளை­களில் சமூ­கத் தனி­மைப்­ப­டுத்­து­த­லுக்கு இட்­டுச் செல்­லக்­கூ­டும் என்று சிறார் மன­நல நிபு­ண­ரான முனை­வர் மார்­கஸ் டான் தெரி­வித்­தார்.

தாழ்வு மனப்­பான்மை, உணர்ச்­சி­களை அடக்­கிக்­கொள்­ளு­தல், எதிர்­பார்ப்­பு­க­ளால் அலைக்­க­ழிக்­கப்­ப­டு­தல் முத­லி­ய­வற்­றால் 'ஹிகி­கொ­மொரி' ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யம் உள்­ள­தா­கத் தெரி­வித்­தார், நாரா அறி­வி­யல், தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை பேரா­சி­ரி­யர் முனை­வர் லியூ கொங் மெங்.

"சமூ­கத்­தி­லி­ருந்து வில­கிக்­கொள்ள வேண்­டும் என்ற எண்­ணத்­தி­லி­ருந்து 'ஹிகி­கொ­மொரி' ஏற்­ப­டக்­கூ­டிய அபா­யம் தொடங்­கு­கிறது. ஆனால், இப்­படி எண்­ணு­வோர் அனை­வ­ரும் நீடித்த காலத்­திற்­குச் சமூ­கத் தனி­மைப்­பாட்­டில் சிக்­கு­வ­தில்லை," என்­றார் முனை­வர் மார்­கஸ் டான்.

சமூ­கத் தனி­மைப்­பாட்­டைக் கையாள்­வ­தற்கு 'சாய்ம்' (CHIME) எனும் வழி­மு­றை­யைப் பரிந்­துரை செய்­தார், திரு நர­சிம்­மன். உற்­றா­ரு­டன் உற­வு­களை வளர்த்­துக்­கொள்­வது, எதிர்­கா­லத்­தைக் குறித்து நம்­பிக்கை கொள்­வது, அடை­யா­ளத்­தை­யும் வாழ்க்­கை­யின் பொரு­ளை­யும் வரை­ய­றுத்­துக்­கொள்­வது, தன்னை ஊக்­கு­வித்­துக் கொள்­வது என ஐந்து படி­கள் கொண்­டது 'சாய்ம்' வழி­முறை.

"இளை­யர்­க­ளுக்கு உத­விக்­க­ரம் நீட்ட விரும்­பி­னோம். நீங்­கள் தனி­யாள் அல்ல, உங்­க­ளுக்­காக குடும்­பத்­தா­ரும் சமூ­கத்­தி­ன­ரும் இருக்­கின்­ற­னர் என்­பதை வலி­யு­றுத்த இந்­தப் பயி­ல­ரங்­குக்கு ஏற்­பாடு செய்­தோம். பெற்­றோர், நண்­பர்­கள், மன­ந­லத் துறை­யைச் சேர்ந்­தோர் எனப் பல­த­ரப்­பி­ன­ருக்­கும் இந்­நிகழ்ச்சி உத­வி­யாக இருக்­கும்," என்­றார் திரு நர­சிம்­மன்.

'ஹோம் அலோன்' பயி­ல­ரங்கை 'இம்­பார்ட்'டின் 'ஃபேஸ்புக்' தளத்­தில் காண­லாம்.

vishnuv@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!