புது வீடுகள் கட்டுப்படியான விலையில் இருப்பதே முக்கியம்

இரண்­டாம் நிதி, தேசிய வளர்ச்சி அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா­வும் எதிர்க்­கட்­சித் தலை­வர் பிரித்­தம் சிங்­கும் புதிய வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­க­ளைக் கட்­டு­வ­தற்­கான செலவு, வீட்டு மானி­யங்­க­ளின் துல்­லிய விவ­ரங்­கள் ஆகி­யவை தொடர்­பாக நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று கடு­மை­யான விவா­தத்­தில் ஈடு­பட்­ட­னர்.

அத்­த­கைய விவ­ரங்­களை வெளி­யி­டு­வது அர்த்­த­மற்­றது என்ற அமைச்­சர், புதிய வீடு­கள் கட்­டுப் ­ப­டி­யாக உள்­ள­னவா என்­பதே சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு முக்­கி­யம் என்­றார்.

வீவ­க­வின் பற்­றாக்­குறை குறித்து வெளி­யி­டப்­பட்ட பொய்­யான செய்­தி­க்கு அண்­மை­யில் விடுக்கப்பட்ட திருத்த உத்­த­ரவைச் சுட்­டிப் பேசிய திரு பிரித்­தம், புதிய வீவக வீடு­க­ளைக் கட்ட ஆகும் ஒட்­டு­மொத்த செல­வை ஒன்றொன்றாகப் பிரித்து விவ­ர­மாக வெளி­யிட வேண்­டும் என்று அரசாங்கத்தைக் கேட்­டார்.

மேலும், புதிய வீடு­க­ளின் சந்தை விலை தீர்­மா­னிக்­கப்­பட்டு வழங்­கப்­படும் மானி­யங்­க­ளின் மதிப்பு என்ன என்­றும் அவர் கேள்வி எழுப்­பி­னார். இவ்விவரங்களைத் தெரிந்து­கொள்வது வீடு­களை வாங்­கு­வோ­ருக்கு உத­வி­யாக இருக்­கும் என்று அவர் வாதிட்­டார்.

அதற்கு பதில் அளித்த குமாரி இந்­தி­ராணி, வீடு­க­ளைக் கட்­டு­ வ­தில் நிலத்­துக்­கான செல­வும் கட்­டு­மா­னச் செல­வும் அடங்­கும் என்­றார்.

ஒரு வீட்­டின் சந்தை மதிப்­பி­லி­ருந்து மானி­யங்­க­ளை­யும் உத­வித் தொகை­யை­யும் கழித்த பின்­னரே வீவக வீட்­டின் விற்­பனை விலை தீர்­மா­னிக்­கப்­ப­டு­வ­தா­க­ அ­வர் விளக்­க­ம­ளித்­தார்.

வீட்டு மானி­யங்­களை வழங்­கு­ வ­தா­லும் சந்தை விலைக்­குக் குறை­வாக விற்­ப­தா­லும் அர­சாங்­கம் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு கிட்­டத்­தட்ட எல்லா புதிய வீடு­க­ளை­யும் நிகர இழப்­பில் விற்­ப­தாக அமைச்­சர் கூறி­னார்.

அத­னால் செலவு விவ­ரங்­களை வெளி­யி­டு­வ­தால் வாங்­கு­வோ­ருக்கு எந்தப் பய­னும் அர்த்­த­மும் இல்லை என்­றார் குமாரி இந்­தி­ராணி.

"முழுக்க முழுக்க சந்தை விலை­யைக் கொடுப்­ப­தை­விட குறைந்த விலை­யில் வாங்­கு­கி­றோம் என்­பது பிடிஒ வீட்டை வாங்­கும் ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ருக்­கும் தெரி­யும். அத­னால்­தான் பிடிஒ வீடு­கள் பிர­ப­ல­மாக உள்­ளன," என்­றார் அமைச்­சர். வெவ்­வேறு இடங்­களில் உள்ள வீடு­க­ளுக்கு இடத்துக்கேற்ற விலை­யும் மானி­ய­மும் தீர்­மா­னிக்­கப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

இதற்­கி­டையே, அரசு நிலத்­தில் கட்­டப்­படும் வீவக வீடு­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரர்­கள் மூன்று முறை விலை கொடுக்­க­வில்லை என்று குமாரி இந்­தி­ராணி தெரி­வித்­தார். தொகுதி­ யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியோங் மன் வாயின் கேள்­விக்கு அவர் அவ்­வாறு பதி­ல­ளித்­தார்.

அரசு நிலத்தை அர­சாங்­கம் கைப்­பற்­றும்­போது உள்ள விலை, அர­சாங்­கம் கொடுத்த விலைக்­கும் அத­னி­ட­மி­ருந்து வீவக நிலத்தை வாங்­கும்­போது உள்ள விலைக்­கும் உள்ள வேறு­பாடு, நிலத்­துக்­கான விலை­யால் வீவ­க­வுக்கு ஏற்­படும் பற்­றாக்­கு­றையை ஈடு­கட்ட விதிக்­கப்­படும் வரி ஆகிய விவ­ரங்­களை அவர் கேட்­டார்.

ஆனால் சிங்­கப்­பூ­ரர்­கள் இதுபோன்ற மூன்று வெவ்வேறு அம்சங்களுக்கு ­விலை கொடுப்­ப­தில்லை என்ற குமாரி இந்­தி­ராணி, வீவக வீடு ­க­ளைக் கட்ட அரசு நிலத்தை அர­சாங்­கம் லாபத்­துக்கு விற்­ப­தில்லை என்று கூறி­னார்.

அர­சாங்க வீடு­ கட்­ட நிலத்­தைக் கைய­கப்­ப­டுத்­தும்­போது அர­சாங்­கம் அவற்­றின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு சந்தை மதிப்­பின் அடிப்­ப­டை­யி­லான தொகை­யை இழப்பீடாகத் தரு­கிறது.

இது கடந்த 2007ஆம் ஆண்டு முதல் நடப்­பில் உள்­ளது. அதற்கு அர­சாங்க வரு­வாய், அர­சாங்­கத்­தின் முந்­தைய இருப்­பு­நிதி ஆகி­யவை பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அமைச்­சர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!