ஜிஎஸ்டி உயர்வு: காரசாரமான விவாதம்

பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) சிங்­கப்­பூ­ரின் நிதி நெருக்­க­டியை சமா­ளிப்­ப­தோடு, நாட்­டைப் போட்­டித்­தன்­மை­யாக வைத்­தி­ருக்­க­வும் உத­வி­யுள்­ள­தாக புக்­கிட் பாத்­தோக் தொகு­திக்­கான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முரளி பிள்ளை கூறி­யுள்­ளார்.

ஜிஎஸ்­டியை உயர்த்­தும்­போ­தெல்­லாம் பாட்­டா­ளிக் கட்சி அதை எதிர்த்­த­தா­க­வும், வரி உயர்வு, குறைந்த வரு­மா­னம் பெறு­ப­வர்­களை அடி­மட்­டத்­துக்­குத் தள்­ளி­வி­டும் என எதிர்த்­த­ரப்­பி­னர் வாதிட்டு வந்­துள்­ள­தா­க­வும் திரு முரளி சொன்­னார். ஆனால் அத்­த­கைய ஆரு­டங்­கள் பலித்­த­தில்லை என அவர் குறிப்­பிட்­டார்.

நாடா­ளு­மன்­றத்­தில் ஜிஎஸ்டி திருத்த மசோதா தொடர்­பாக நேற்று இடம்­பெற்ற விவா­தத்­தின்­போது திரு முரளி பேசி­னார்.

இக்­க­டி­ன­மான கால­கட்­டத்­தில் வரியை உயர்த்­தி­னால் மட்­டுமே நாட்­டின் அடித்­த­ளத்தை வலு­வாக்­க­லாம் என்­றார் திரு முரளி.

இந்­நி­லை­யில், நிச்­ச­ய­மற்ற பண­வீக்­கம், உய­ரும் விலை­வாசி ஆகி­ய­வற்­றுக்கு இடையே ஜிஎஸ்­டியை உயர்த்­து­வது பொறுப்­பற்ற செயல் என பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜேமஸ் லிம் கூறி­யுள்­ளார்.

முன்­ன­தாக, ஜிஎஸ்­டியை உயர்த்­து­வது பொறுப்­புள்ள செயல் எனத் துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் கூறி­யதை எதிர்த்து செங்­காங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு லிம் அவ்­வாறு குறிப்­பிட்­டார்.

உல­க­ள­வில் நில­வும் ஏற்ற இறக்­க­மான பண­வீக்­கம், சிங்­கப்­பூ­ரில் உள்ள செல­வு­கள் ஆகி­ய­வற்­றைக் கருத்­தில் கொண்டு ஜிஎஸ்­டியை உயர்த்­து­வதே பொறுப்­பான நட­வ­டிக்கை என துணைப் பிர­த­மர் அக்­டோ­பர் 14ஆம் தேதி குறிப்­பிட்­டார்.

ஜிஎஸ்டி போன்ற வரி­களை அதி­க­ரிக்­கும்­போது, பண­வீக்­கம் உயர்­வதை தாம் கவ­னித்­தி­ருப்­ப­தாக திரு லிம் குறிப்­பிட்­டார்.

ஜப்­பானை உதா­ர­ணம் காட்­டிய அவர், கடந்த 25 ஆண்­டு­களில் அந்­நாடு மூன்று முறை ஜிஎஸ்­டியை உயர்த்­தி­யுள்­ள­தா­க­வும் அவ்­வாறு செய்­யும்­போது ஒவ்­வொரு முறை­யும் பண­வீக்­கம் அதி­க­ரித்­த­தா­க­வும் சுட்­டிக்­காட்­டி­னார்.

பண­வீக்­கம் சிங்­கப்­பூ­ரர்­களை வெகு­வா­கப் பாதித்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட திரு லிம், ஓர் ஆண்­டுக்கு முன்பு இருந்­ததைவிட உணவு விலை­ 6.9 விழுக்­காடு அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

ஜிஎஸ்­டியை உயர்த்­து­வது குறித்து எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் கேள்வி எழுப்­பி­னர்.

செங்­காங் குழுத்­தொ­குதியின் மற்­றொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான லூயிஸ் சுவா, வரியை ஒன்­பது விழுக்­கா­டாக உயர்த்­தும் முடிவு 2019ல் எடுக்­கப்­பட்­டது என்­றார். அப்­போது இருந்த கால­கட்­ட­மும் தற்­போ­துள்ள கால­கட்­ட­மும் வேறு என்­று அவர் கூறினார்.

2019ல் கொவிட்-19 கிரு­மிப்­ பரவல் இல்லை. முக்­கிய பொருள்­ க­ளின் விலை­ தற்­போ­துள்ள விலையை­விட பாதி­யாக இருந்­தது.

இப்­போ­தைய கால­கட்­டத்­தில் ஜிஎஸ்­டியை உயர்த்­து­வது சரி­யில்லை என்று திரு சுவா கூறி­னார். ஜிஎஸ்டி திருத்த மசோதா தொடர்­பாக ஐந்து மணி­நே­ரம் நீடித்த விவா­தத்­தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பலர் பேசி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!