அரசாங்க நிலத்தில் அத்துமீறி நுழைபவருக்கு $50,000ஆக உயரும் அதிகபட்ச அபராதம்

அர­சாங்க நிலத்­தில் அத்­து­மீறி நுழை­ப­வர்­கள் அல்­லது அத்­த­கைய நிலத்­தில் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வர்­க­ளுக்­குக் கடு­மை­யான தண்­டனை விதிக்­கப்­படும்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று அறி­மு­கம் செய்­யப்­பட்ட அரசு நிலப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ், அத்­த­கைய செயல்­களை மேற்­கொள்­ப­வர்­க­ளுக்கு அதி­க­பட்ச அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

தற்­போது அதி­க­பட்ச அப­ரா­தம் $5,000. இந்­தத் தொகை $50,000ஆக உயர்த்­தப்­படும்.

தற்­போது நடப்­பில் உள்ள ஆறு மாதம் வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யில் மாற்­ற­மில்லை.

புதிய சட்­டத்தை நாடா­ளு­மன்­றம் ஏற்­றுக்­கொண்­டால், அது நடப்­பில் உள்ள அரசு நில அத்து மீறல்­கள் சட்­டத்­துக்­குப் பதி­லாக அமை­யும்.

அரசு நில அத்­து­மீ­றல்­கள் சட்­டம் கடை­சி­யாக 1974ஆம் ஆண்­டில் மறு­ஆய்வு செய்­யப்­பட்­டது.

சட்­டம் மறு­ஆய்வு செய்­யப்­பட்­ட­தி­லி­ருந்து அத்­து­மீ­றல்­கள், அரசு நிலத்தை தவ­றா­கப் பயன்­ப­டுத்­தும் சம்­ப­வங்­கள் ஆகி­ய­வற்­றின் தன்மை மாறி­யுள்­ளன.

இத­னால், சிங்­கப்­பூர் நில ஆணை­யத்­தின் பெரும்­பா­லான நட­வ­டிக்­கை­கள் பய­னற்­ற­வை­யா­கி­யுள்­ளன என ஆணை­யம் கூறி­யது.

அரசு நிலங்­கள் பாது­காக்க இச் சட்­டத் திருத்­தங்­கள் உத­வும் எனக் கூறப்­பட்­டது.

குறிப்­பிட்ட ஒரு நிலத்­தில் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­கள் நடக்­கின்­றன என்று சந்­தே­கித்­தால், சிங்­கப்­பூர் நில ஆணை­யத்­தின் அதி­கா­ரி­கள் உத்­த­ரவு இல்­லா­மல் அந்­நி­லத்­தில் நுழைந்து சோத­னை­யி­டும் அதி­கா­ரத்­தை­பு­திய சட்­டம் அளிக்­கிறது.

அத­னு­டன், சிறிய குற்­றங்­க­ளைப் புரி­ப­வர்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­க­வும் அர­சாங்க நிலத்­தில் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ப­வர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­க­வும் நில ஆணை­யத்­தின் அதி­கா­ரி­க­ளுக்கு அதி­கா­ரம் அளிக்­கப்­படும்.

புதிய சட்­டத்­தின் மற்­றொரு முக்­கிய அம்­ச­மாக, நில ஆணை­யத்­தின் அதி­கா­ரி­கள் அரசு நிலத்­தில் கட்­டப்­படும் சட்­ட­வி­ரோத கட்­டு­மா­னங்­களை அகற்ற முடி­யும். இதற்­கான செலவை குற்­றம் புரிந்­த­வர்­கள் ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!