மரண தண்டனையை ஒத்தி வைக்கும் இறுதிக்கட்ட முயற்சிகள்: நடைமுறை மாற்றம்

சட்­டப்­படி எல்லா வழி­க­ளி­லும் மேவ்முறையீடு செய்து தோற்ற பின், மரண தண்­ட­னைக்கு எதி­ராக கைதி­கள் மீண்டும் மேல்முறையீடு செய்யும் நடை­மு­றை­களில் மாற்­றங்­கள் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன. அது குறித்த சட்­டத் திருத்த மசோதா நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்­டது.

கடை­சிக்­கட்­டத்­தில் மீண்­டும் வழக்கு தொடுக்­கும் கார­ணம் விளக்­கப்­பட வேண்­டும் என்­பது அவற்­றில் ஒன்று. மேலும், மசோதா ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டால் மேல் முறை­யீட்­டுக்­குப் பிந்­தைய வழக்­கு­கள் மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தில் மட்­டுமே விசா­ரிக்­கப்­படும்.

தற்­போது அவை உயர்­நீ­தி­மன்­றத்­தி­லும் மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தி­லும் விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

சட்­டத் திருத்த மசோ­தாவை சட்ட அமைச்­சுக்­கான மூத்த நாடா­ளு­மன்ற செய­லா­ளர் ரஹாயு மஸாம் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் அறி­மு­கம் செய்­தார்.

மேல்­மு­றை­யீ­டு­கள் தோற்ற பின்­னர், மரண தண்­ட­னையை ஒத்தி வைக்க வேண்டும், மன்­னிப்பு வழங்க மறுத்ததை அதி­பர் மறு­ ப­ரி­சீ­லிக்க வேண்­டும் என்­பது போன்ற பல கார­ணங்­களை முன்­வைத்து கைதி­கள் வழக்கு தொடுக்­கின்­ற­னர்.

சட்­டப்­படி எல்லா வழி­க­ளி­லும் மேல்­மு­றை­யீடு செய்த பின்­, கடைசி நேரத்­தில் தண்­ட­னைக்கு எதி­ராக மீண்­டும் முயற்சி செய்யும் மரண தண்­ட­னைக் கைதி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­தாக சட்ட அமைச்­சின் பேச்­சா­ளர் கூறி­னார்.

முன்­மொ­ழி­யப்­பட்ட சட்­டத்­தி­ருத்­தங்­கள், அத்­தகை வழக்­கு­களுக்கான நடை­மு­றை­யைத் தெளிவுபடுத்­தும். அத்­து­டன், மேல்­மு­றை­யீடு நடை­ முறைக்கு ஏற்ப இல்­லா­விட்­டா­லும் அதை ஏற்­றுக்­கொண்டு விசா­ரிக்­கும் உரிமை நீதி­மன்­றங்­க­ளுக்கு இருக்­கும் என்று பேச்­சா­ளர் கூறி­னார்.

போதைப் பொருள் கடத்­தி­ய­தற்­காக மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட மலே­சி­ய­ரான நாகேந்­தி­ரன் கே. தர்­ம­லிங்­கத்­தின் வழக்கு அத்­த­கைய வழக்­கு­களில் ஒன்று. போதை­மிகு அபின் கடத்­திய அவ­ருக்கு 2010ஆம் ஆண்டு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அவ­ரது மேல்­ முறை­யீடு 2011ல் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

2015ஆம் ஆண்டு முதல் மரண தண்­ட­னைக்கு எதி­ராக அவர் ஏழு முறை மேல்­மு­றை­யீடு செய்­தார். தண்­ட­னைக்கு சில நாள்­க­ளுக்கு முன்­ன­ரும் அவர் வழக்­க­றி­ஞர்­கள் பல வழக்­கு­க­ளைத் தொடுத்து தண்­ட­னையை நிறுத்த முயன்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!