வருமுன் காப்பதே சிறப்பான அணுகுமுறை

நெருக்­க­டி­நிலை வரும் வரை காத்­தி­ருக்­கா­மல் அது வரு­முன் காப்­பதே சிறப்­பான அணு­கு­முறை என்­பதை கொவிட்-19 நெருக்­க­டிநிலை கற்­பித்­தி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஏழா­வது உல­கச் சுகா­தார மாநாட்டை (7th World One Health Congress) அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று தொடங்கி­வைத்­தார். இந்த மாநாடு ஐந்து நாள்­க­ளுக்கு நடை­பெ­றும். உல­க­ளா­விய இணைப்பு கார­ண­மாக முன்­பை­விட தற்­போது நோய்­கள் மிக விரை­வாக உல­கம் முழு­வ­தும் பர­வு­வ­தாக அதி­பர் ஹலிமா கூறி­னார்.

ஆனால் அதே உல­க­ளாவிய இணைப்பு, கூடு­தல் ஒத்­து­ழைப்­புக்கு வழி வகுப்­ப­தாக அவர் தெரி­வித்­தார். இந்த நிலை உல­க­ளா­விய சமூ­கத்­துக்கு வலு­வான, ஆக்­க­பூர்­வ­மான முறை­யில் செயல்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

"மனித இனம், விலங்­கு­கள், சுற்­றுச்­சூ­ழல் ஆகி­யற்­றின் இடையே வலு­வான இணைப்பு உள்­ளது என்­பதை கடந்த சில ஆண்­டு­க­ளாக நிகழ்­பவை நிரூ­பிக்­கின்­றன. சுகா­தா­ரம், நல்­வாழ்வு ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் இவை மூன்­றும் பின்னிப் பிணைந்­துள்­ளன," என்று சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாடு மையத்­தில் கூடிய 1,400 பேரி­டம் அதி­பர் ஹலிமா தெரி­வித்­தார்.

மாநாட்­டில் மேலும் 1,000 பேர் மெய்­நி­கர் வழி­யா­கக் கலந்­து­கொண்­ட­னர். இந்த மாநாடு ஒவ்­வொரு முறை­யும் வெவ்­வேறு நாடு­களில் நடை­பெ­றும். இவ்­வாண்­டுக்­கான மாநாட்­டுக்கு சிங்­ஹெல்த் டியூக்-என்­யு­எஸ் குளோ­பல் சுகா­தா­ரப் பயிற்­சிக் கழ­கம் ஏற்­பாடு செய்­துள்­ளது. மாநாட்­டில் 60 நாடு­

க­ளைச் சேர்ந்த 120 பேர் உரை­யாற்­றி­னர். அவர்­களில் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அற­நி­று­வ­னத்­தின் உல­க­ளா­விய மேம்­பாட்­டுப் பிரி­வின் தலை­வர் டாக்­டர் கிறிஸ்­ட­ஃபர் இலா­ய­சும் ஒரு­வர். மாநாட்­டில் பேசி­ய­வர்­கள் மனி­தர்­கள், விலங்கு, உணவு, சுற்­றுப்­புற அறி­வி­யல் ஆகிய தலைப்­பு­க­ளை­யொட்டி பேசி­னர். உலக மக்­க­ளின் நல­னுக்கு நாடு­களும் அமைப்­பு­களும் ஒன்­றி­ணைந்து செயல்­ப­ட­லாம் என்­பதை கடந்த மூன்று ஆண்­டு­கள் நிரூ­பித்­தி­ருப்­ப­தாக அதி­பர் ஹலிமா கூறி­னார். விநி­யோ­கச் சங்­கி­லியை மீண்­டும் வழக்­க­நி­லைக்­குக் கொண்டு வரு­வது, வெளி­நா­டு­களில் சிக்­கித் தவிப்­போரை அவர்­

க­ளது சொந்த நாடு­க­ளுக்கு அனுப்­பு­வது, கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளை­யும் சிகிச்­சை­ முறைகளையும் விரை­வா­கத் தயா­ரிப்­பது போன்ற உதா­ர­ணங்­களை அவர் சுட்டிக்காட்­டி­னார்.

"புதிய புத்­தாக்க அணு­கு­மு­றை­

க­ளை­யும், சிறந்த செயல்­மு­றை

­க­ளை­யும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்­பு­கள் பரி­மா­றிக்கொண்­டன. கொவிட்-19 தொடர்­பான ஆய்­வுக் கண்­டுபி­டிப்­பு­களை விஞ்­ஞா­னி­கள் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

"நோயால் பொது­மக்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­ப­டா­மல் இருக்க, தடுப்­பூ­சி­கள் அவர்­களை விரை­

வா­கச் சென்­ற­டைய அர­சாங்­கங்­கள் பெரு­ம­ள­வில் ஆத­ரவு வழங்­கின," என்று அதி­பர் ஹலிமா தெரி­வித்­தார். தற்­போது கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின் வீரி­யம் குறைந்துள்ளபோ­தி­லும் அதே போன்ற வேறொரு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால் அதை எதிர்­கொள்ள உல­கம் தயா­ரா­கத் தொடங்­கி­விட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!