சூரிய சக்தியைப் பெருக்க என்டியு $5.7 மி. முதலீடு

சிங்­கப்­பூ­ரின் நன்­யாங் தொழில் நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம், பருவ நிலைக்கு ஆக்­க­பூர்­வ­மாக பங்­காற்­றும் வகை­யில் தனது வளா­கத்­தில் சூரிய சக்தி உற்­பத்­தியை 74 விழுக்­கா­டு அதி­க­ரிக்க 5.7 மில்­லி­யன் வெள்­ளியை முத­லீடு செய்­கிறது.

இதன்­படி அடுத்த ஆண்­டுக்­குள் என்­டியு வளா­கத்­தில் 13,000க்கும் மேற்­பட்ட சூரிய சக்­தித் தக­டு­கள் பொருத்­தப்­படும்.

தற்­போது, அதன் வளா­கத்­தில் 19,000 சூரிய சக்­தித் தக­டு­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன. கடந்த 2015ஆண்­டில் இந்­தத் தக­டு­கள் பொருத்­தப்­பட்­டன.

சூரிய சக்தி மூலம் உற்­பத்தி செய்­யப்­படும் மின்­சா­ரம் பல் கலைக்­க­ழக வளா­கத்­தில் உள்ள கட்­ட­டம் மற்­றும் வச­தி­க­ளுக்­குப் பயன்­ப­டுத்தப்படும்.

கூடு­த­லா­கப் பொருத்­தப்­படும் தக­டு­க­ளால் என்­டி­யு­வின் மொத்த சூரிய சக்தி மின்­சா­ரத்­தின் அளவு 9.82 மெகா ­வாட்­டுக்கு அதி­க­ரிக்­கும்

இது, ஓராண்­டில் 5,300 வீவக ஈரறை வீடு­க­ளுக்குத் தேவை­யான மின்­சா­ரத்­துக்கு ஈடானது.

ஐந்­தாண்டு உத்­தி­பூர்வ திட்­டத்­தின் கீழ், சிறந்த கற்­றல், வாழ்க்கை அனு­ப­வங்­க­ளைத் தரு­வ­தற்கு தொழில்­நுட்பம் சார்ந்த தீர்­வு­கள் வகுக்­கப்­படும்.

இது குறித்து விளக்கிய என்­டி­யு­வின் நீடித்த நிலைத்­தன்மை அலு­வ­ல­கத்­தின் நிர்­வாக இயக்­கு ­ந­ரான பேரா­சி­ரி­யர் மாதவி ஸ்ரீநி­வா­சன், கட்­ட­டங்­கள் அதற்­குத் தேவை­யான மின்­சா­ரத்தை தானா­கவே உற்­பத்தி செய்ய வடி­வ­மைப்பு, தொழில்­நுட்­பம் பயன்­ப­டுத்­தப்­படும் என்­றார்.

என்டியுவின் உதவித் தலைவரான டான் அய்க் நா, கரிம வெளி யேற்றத்தை 2035ல் 50 விழுக் காட்டுக்கு குறைப்பதே இலக்கு என்றார்.

அந்த வகையில் 2035ஆம் ஆண்டில் வளாகத்தில் கரிம வெளி யேற்றம் இருக்காது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!