ஒற்றைப் பெற்றோரின் மாத சராசரி வருவாய் கூடியது

மணம் புரி­யா­மல் குழந்தை பெற்றுக்கொண்­டுள்ள சிங்­கப்­பூர் குடி­மக்­க­ளான தாய்­மார்­கள் பெறு­கின்ற சரா­சரி மாத வரு­மா­னம் கடந்த ஆண்­டு­களில் அதி­க­ரித்து இருக்­கிறது என்று சமூக, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லுயிஸ் இங் கோக் குவாங்­கிற்கு அளித்த எழுத்து மூல­மான பதி­லில், 35க்கும் குறை­வான வய­துள்­ள­வர்­க­ளைப் பொறுத்தவரை மாத சரா­சரி வரு­வாய் 2017ல் $1,800 ஆக இருந்­தது என்­றார். அது 2020ல் $2,500 ஆகி­யது.

35 வய­தும் அதற்­கும் அதிக வய­துள்­ள­வர்­க­ளைப் பார்க்­கை­யில் 2017ல் $5,600 இருந்த மாத சராசரி வரு­மா­னம், 2020ல் $5,900 ஆகக் கூடி­யது.

35க்கும் குறைந்த வய­துள்­வர்­களுக்­கான வரு­வாய் குறை­வாக இருக்­கிறது. அவர்­களில் பகுதி நேர வேலை பார்க்­கக்­கூ­டிய அல்லது ஒரு சில மாதங்­கள் மட்டும் வேலை பார்க்­கக்­கூ­டிய இளம் தாய்­மார்­கள் இருக்­கி­றார்­கள் என்று அவர் தெரி­வித்­தார்.

35 முதல் 36 வரை வய­துள்ள ஒற்­றைப்­ பெற்றோரின் சம்­ப­ளம் தொடர்­பான தக­வல்­கள், அவர்­கள் எண்­ணிக்­கை­யில் குறைவு என்­ப­தால் கிடைக்­க­வில்லை என்­றும் அமைச்­சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!