2018, 2019 நிலவரம்: ஜிஎஸ்டி வரியில் பாதியை சுற்றுப்பயணிகள், வெளிநாட்டினர் செலுத்தினர்

சிங்­கப்­பூ­ரில் கடந்த 2018 மற்­றும் 2019ஆம் ஆண்­டு­களில் சுற்­றுப் பய­ணி­களும் வெளி­நாட்­டி­ன­ரும் ஏறக்­கு­றைய $3 பில்­லி­யன் ஜிஎஸ்டி வரி­யைச் செலுத்­தி­னர். இது அந்த ஆண்­டு­களில் குடும்­பங்­களும் தனிப்­பட்­ட­வர்­களும் செலுத்­திய வரி­யில் சுமார் பாதி­யா­கும்.

நிதி மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் நாடா­ளு­மன்­றத்­தில் இதனைத் தெரி­வித்­தார்.

குடும்­பங்­களும் தனி­ந­பர்­களும் 2018 மற்­றும் 2019ஆம் ஆண்­டு­களில், சுற்­றுப் பய­ணி­க­ளுக்கு ஜிஎஸ்டி திருப்பித் தரும் திட்­டத்­தின்­கீழ் கழிக்­கப்­பட்ட தொகை­போக, ஆண்­டுக்கு ஏறக்­கு­றைய $6.8 பில்­லி­யன் ஜிஎஸ்டி செலுத்­தி­னர்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் குடும்­பங்­களுக்கு ஆண்­டு­தோ­றும் கொடுக்­கப்­படும் $1 பில்­லி­ய­னுக்­கும் அதிக மதிப்­புள்ள ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்­டு­களை­யும் கழித்­து­விட்டுப் பார்க்­கை­யில், குடும்­பங்­கள், தனி­ந­பர்­க­ளி­டம் இருந்து வசூ­லிக்­கப்­பட்ட வரு­டாந்­திர ஜிஎஸ்டி வரி கிட்­டத்­தட்ட $5.7 பில்­லி­ய­னாக இருக்­கும் என்று மதிப்­பி­டப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் வெளி­நாட்­டி­ன­ரும் சுற்­றுப் பய­ணி­களும் இதில் 50 விழுக்­காட்­டிற்குப் பொறுப்பு ஏற்­றுக்­கொண்­ட­தாக திரு சீ குறிப்­பிட்­டார். சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் மேல்­மட்ட 20 விழுக்­காட்டு குடும்­பங்­கள் வரி­யில் கிட்­டத்­தட்ட 20% வரி­யைச் செலுத்­தி­ன.

கொவிட்-19 கார­ண­மாக பயனீட்டு நில­வ­ரங்­கள் சரி­வர பிரதி­ நி­திக்­கப்­ப­டாத நிலை­யில், 2020 மற்­றும் 2021ஆம் ஆண்­டு­க­ளுக்­கான புள்­ளி­வி­வ­ரங்­கள் குறிப்­பிடப்­ப­ட­வில்லை.

ஆகை­யால், அர­சாங்­கம் வசூ லிக்­கும் நிகர ஜிஎஸ்டி வரி­யில் பெரும்­ப­குதி இரண்டு பிரி­வி­ன­ரிடம் இருந்து வரு­கிறது.

எஞ்­சிய 30% வரியை மற்­ற­வர்கள் செலுத்­து­கி­றார்­கள். இதில் குடும்­பங்­களும் தனி­ந­பர்­களும் 80% அள­வுக்கு வரி செலுத்­து­கி­றார்­கள் என்று அவர் தெரி­வித்­தார்.

பாட்­டா­ளிக் கட்சியைச் சேர்ந்த செங்­காங் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் இணைப் பேரா­சி­ரி­யர் ஜாமுஸ் லிம்மின் கேள்விக்குப் பதி­ல­ளித்து பேசிய அமைச்­சர், அரசாங்­கம் அளிக்­கும் ஆத­ரவு தொகுப்­புத் திட்­டம் நடுத்­தர வரு­மானக் குடும்­பங்­க­ளுக்­கும் கிடைக்­கிறது என்­பதை சுட்­டி­னார்.

அந்­தத் திட்­டத்­தில் இடம்பெற்று உள்ள சில அம்­சங்­கள், அதி­கம் சம்­பா­திக்­கின்ற அல்­லது தனி­யார் வீடு­களில் வசிக்­கின்­ற­வர்­க­ளுக்­கும் நன்மை பயக்­கின்­றன என்­றாரவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!