அனுமதிக் கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்து

அடுக்குமாடிக் கூரைத் தோட்டங்களில் பொறுப்பற்ற செயல்கள்

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­கள் சில­வற்­றில் அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் கூரைத் தோட்­டங்­க­ளுக்­குச் செல்­வ­தற்கு கட்­டுப்­பாட்­டு­டன் கூடிய அனு­மதி வழங்­கு­வது தொடர்­பில் நட­வடிக்கை எடுக்­க­வேண்­டும் என்று தஞ்­சோங் பகார் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோன் பெரேரா வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

ஹெண்­டர்­சன்-டாசன் பகு­தி­யில் உள்ள குடி­யி­ருப்­பா­ளர்­கள் அங்­கி­ருக்­கும் கூரைத் தோட்­டங்­க­ளுக்­குச் செல்­லும் பார்­வை­யா­ளர்­க­ளின் பொறுப்­பற்ற செயல்­க­ளால் சிர­மத்­துக்கு ஆளா­கி­யுள்­ள­னர் என்று நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று அவர் கூறி­னார்.

அசுத்­த­மான மின்­தூக்­கி­கள், நிரம்பி வழி­யும் குப்­பைத்­தொட்­டி­கள், சித­றிக் கிடக்­கும் குப்பை, சட்­ட­வி­ரோத புகைப்­பி­டித்­தல், இரைச்­சல் போன்ற சிர­மங்­க­ளைக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் எதிர்­கொள்­வ­தா­கத் திரு­வாட்டி பெரேரா குறிப்­பிட்­டார்.

வார­யி­று­தி­களில் இரவு வெகு­நே­ரம் வரை இரைச்­சல் கேட்­ப­தால் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் தூக்­கம் கெடு­கிறது.

புகைத்­து­விட்டு வீசப்­பட்ட சிக­ரெட் துண்­டு­கள், காலி மது­பான போத்­தல்­கள் ஆகி­ய­வற்­றால் துப்­பு­ர­வா­ளர்­க­ளுக்­குக் கூடு­தல் வேலை என்­பதை அவர் சுட்­டி­னார்.

ஸ்கை­வில்@டாசன் குடி­யி­ருப்­பின் 47வது தளத்­தில் அமைந்­தி­ருக்­கும் கூரைத் தோட்­டத்­தில் இச்­சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன.

அதே­நே­ரத்­தில் புகழ்­பெற்ற பின்­னக்­கிள்@டக்ஸ்­டன் குடி­யி­ருப்­புக் கட்­ட­டத்­தின் 50ஆம் தளத்­தில் அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் கூரைத் தோட்­டத்­தில் இத்­த­கைய சிக்­கல்­கள் இல்லை என்­ப­தைத் தமது உரை­யில் குறிப்­பிட்ட திரு­வாட்டி பெரேரா, அங்கு ஒரு நாளைக்கு 200 பார்­வை­யா­ளர்­க­ளுக்கு மட்­டுமே அனு­மதி வழங்­கப்­ப­டு­வ­தை­யும் அதற்கு ஒரு­வ­ருக்கு ஆறு வெள்ளி கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­டு­வ­தை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

அதே­போன்ற கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­கள், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்­கு­மா­டிக் கட்­ட­டங்­க­ளின் கூரைத் தோட்­டங்­கள் அனைத்­தி­லும் அமல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும் என்று அவர் கோரிக்கை விடுத்­தார்.

கூரைத் தோட்­ட நிர்வாகத்தில் ஒழுங்குமுறையை இது உறு­தி­செய்­யும் என்­றார் அவர்.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளா­கத் தொண்­டூ­ழி­யர்­கள் இரவு 10 மணிக்­கு­மேல் அக்கூரைத் தோட்­டங்­களில் சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்டு, பார்­வை­யா­ளர்­க­ளி­டம் அங்­குள்ள குடி­யி­ருப்­பா­ளர்­கள் ஓய்வெடுக்க வேண்­டும் என்­பதை நினை­வு­ப­டுத்­து­வ­தா­கக் கூறிய அவர், இது தொடர்ந்து சாத்­தி­ய­மில்லை என்­பதை விளக்­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!