தாயையும் தாரத்தையும் தாக்கிய ஆடவருக்குச் சிறைத்தண்டனை

மகேந்­தி­ரன் நரஜா எனும் 44 வயது ஆட­வர் சென்ற ஆண்டு ஜூன் 9ஆம் தேதி தனது 67 வய­துத் தாயா­ரு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­டார். பின்­னர் அவ­ரைத் தள்­ளி­ய­து­டன் துடைப்­பத்­தால் அவ­ரது கையில் அடித்­தார்.

மகேந்­தி­ரன் தாக்­கி­ய­தில் மூதாட்டி 20 நாள்­க­ளுக்கு மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை எடுக்க நேரிட்­டது என்று அர­சாங்­கத் துணை வழக்­க­றி­ஞர் கூறி­னார். தாயார் தள்­ளாடி எழுந்­த­போது அவ­ரது வயிற்­றில் மகேந்­தி­ரன் உதைத்­த­தா­க­வும் அத­னால் மூதாட்டி மீண்­டும் தரை­யில் விழுந்­த­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

இரு­வ­ருக்­கும் இடை­யில் புகுந்த மகேந்­தி­ர­னின் காதலி, மூதாட்­டி­யைப் பாது­காப்­பாக வீட்­டிற்கு வெளியே அழைத்­துச் சென்­றார்.

இருப்­பி­னும் தாயா­ரைத் தொடர்ந்து சென்ற மகேந்­தி­ரன், தாழ்­வா­ரத்­தில் இருந்த தனது கால­ணி­யால் மூதாட்­டி­யின் இடது கையில் பல­முறை அடித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

சம்­ப­வம், புக்­கிட் பாத்­தோக்­கில் மகேந்­தி­ரன் தனது தாயா­ரு­டன் தங்கி இருந்த வீட்­டில் நடந்­தது.

மகேந்­தி­ரன் தாக்­கி­ய­தில் மூதாட்­டிக்­குத் தலை­யி­லும் கை, கால்­க­ளி­லும் காயங்­கள் ஏற்­ப­டவே பக்­கத்து வீட்­டுக்­கா­ரர் காவல்­துறைக்­குத் தக­வல் அளித்­தார்.

அதி­கா­ரி­கள் பிறகு மகேந்­தி­ர­னைக் கைது செய்­த­னர்.

இரண்டு நாள் கழித்து சொந்­தப் பிணை­யில் அவர் விடு­விக்­கப்­பட்­டார்.

பின்­னர் இந்த ஆண்டு ஜூன் மாதத்­தில் தனது காத­லியை மகேந்­தி­ரன் திரு­ம­ணம் செய்­து­கொண்­டார். இரண்டு மாதங்­களில் தனது மனை­வி­யை­யும் அவர் தாக்­கி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு 8 மணிக்கு தங்­கள் செல்­லப் பிரா­ணி­யான நாயை மகேந்­தி­ரன் தாக்­கு­வ­தைப் பார்த்த அவ­ரது 38 வயது மனைவி தடுக்க முயன்­றார்.

அப்­போது மனை­வியை கழிப்­பறைக்­குள் தள்­ளிய மகேந்­தி­ரன் மாதின் தலை­யைச் சுவ­ரில் மோதி­ய­தா­க­வும் கூறப்­பட்­டது.

எப்­ப­டியோ சமா­ளித்­துக்­கொண்ட மனைவி, மகேந்­தி­ர­னின் கைத்­தொ­லை­பே­சி­யைப் பறித்து அதன்­மூ­லம் காவல்­து­றை­யி­னரை உத­வி­கோரி அழைத்­தார்.

காவல்­து­றை­யி­னர் வரு­வ­தற்­குள் கழிப்­ப­றைக்கு வெளியே மகேந்­தி­ர­னைத் தள்­ளிய அவர் கத­வைத் தாளிட்­டுக்­கொண்­டார்.

பின்­னர் அவர் திறந்­த­போது மகேந்­தி­ரன் மாதைக் கீழே தள்­ளி­ய­து­டன் கழுத்­தைப் பிடித்து, கன்­னத்­தில் அறைந்து, கைத்­தொலை­பே­சி­யால் வாயில் அடித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

காவல்­து­றை­யி­னர் வந்த பிறகு மகேந்­தி­ர­னின் மனைவி சிகிச்­சைக்­காக இங் டெங் ஃபோங் பொது­ம­ருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டார்.

தாயா­ரை­யும் மனை­வி­யை­யும் தாக்­கி­யது தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மகேந்­தி­ரன் ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு, ஓராண்டு, ஒரு வாரச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

சிங்கப்பூரில் இம்மாதம் மகன் தாயைத் தாக்கிய இரண்டாவது சம்பவம் இது.

முன்னதாக, பெற்றோர் இருவரையும் தாக்கிய கியோங் பூன் வீ எனும் 26 வயது ஆடவருக்கு, இம்மாதம் 2ஆம் தேதி, ஏழு மாதம், ஐந்து வாரச் சிறை விதிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!