37 துணை மின்நிலையங்களில் சூரிய சக்தித் தகடுகள்

தீவு முழு­தும் உள்ள 37 துணை மின் நிலை­யங்­களில் சூரிய சக்­தித் தக­டு­கள் பொருத்­தப்­ப­ட­வுள்­ளன. இதன் மூலம் ஓர் ஆண்­டுக்கு 4,500க்கும் மேற்­பட்ட நாலறை வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­க­ளுக்­குப் போதுமான மின்­சக்தி உரு­வாக்­கப்­படும் எனக் கூறப்­பட்­டது.

இந்த சக்­தித் தக­டு­கள் 15.7 மெகா­வாட்-பீக் அளவு சூரிய எரி­சக்தி உற்­பத்தி செய்­யும் ஆற்­றல் பெற்­றவை என எஸ்பி குழு­மம் தெரி­வித்­தது. குழு­மத்­தின் பசு­மைத் திட்­டத்­தின் கீழ், 2025க்குள், ஆண்டு­தோ­றும் 21,000 மெகா­வாட் அள­வுக்கு மின்­சக்தி உற்­பத்தி செய்­யப்­படும்.

சூரிய சக்­தித் தக­டு­கள் மூன்று கட்­டங்­க­ளா­கப் பொருத்­தப்­படும். முதல் கட்­டத்­தில் ஆறு துணை மின் நிலை­யங்­களில் தக­டு­கள் அமைக்­கப்­படும். இவை அடுத்த ஆண்­டுக்­குள் 7.1 மெகா­வாட்-பீக் மின்­சக்­தியை உற்­பத்தி செய்­யும்.

இரண்­டா­வது கட்­டத்­தில் 12 நிலை­யங்­களில் தக­டு­கள் பொருத்­தப்­படும். அவற்­றின் வழி 6 மெகா­வாட்-பீக் மின்­சக்தி உற்­பத்­தி­யா­கும். இந்­தக் கட்­டம் 2024ல் நிறை­வடையும்.

இறு­திக் கட்­டத்­தில் 19 நிலை­யங்­களில் தக­டு­கள் அமைக்­கப்­பட்டு, அதன் மூலம், 2.6 மெகா­வாட்-பீக் அளவு மின்­சா­ரம் உற்­பத்தி செய்­யும்.

சிங்­கப்­பூர் தூய்­மை­யான எரி­சக்­திக்கு மாறு­வ­தற்­காக, அதன் துணை மின்­சார நிலை­யங்­க­ளை­யும், கட்­ட­டங்­க­ளின் கூரைப்­ப­கு­தி­க­ளை­யும் பயன்­ப­டுத்­து­வ­தில் எஸ்பி குழு­மம் முனைப்­பாக உள்­ள­தா­கக் குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி குறிப்­பிட்­டார். இதற்­காக எரி­சக்­திச் சந்தை ஆணை­யத்­து­டன் குழு­மம் அணுக்­க­மா­கப் பணி­யாற்­ற­வி­ரும்­பு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

2030க்குள் சூரிய சக்தி மூலம் 2 கிகா­வாட்-பீக் மின்­சா­ரம் உற்­பத்தி செய்­வது என்ற இலக்கை ஆணை­யம் கொண்­டுள்­ளது. அந்த இலக்கை அடைய, சிங்­கப்­பூ­ரின் முதல் சூரிய சக்தித் உற்பத்தி ஆலை சென்­றாண்டு மே மாதம் அமைக்கப்­பட்­டது. இந்­த ஆலையில் கிட்­டத்­தட்ட 4,700 நாலறை வீடு­க­ளின் ஓராண்­டுக்­கான மின்சக்தித் தேவை­யைப் பூர்த்தி செய்­யும் அள­வுக்கு மின்­னாற்­றலை உற்­பத்தி செய்­ய முடியும்.

மற்­றொரு திட்­டத்­தின் கீழ், 1,290 வீவக புளோக்­கு­களில் சூரிய சக்தித் தக­டு­கள் பொருத்­தப்­படும். இவற்­றின் வழி உற்­பத்தி செய்­யப்­படும் 380 மெகா­வாட்-பீக் மின்­சா­ரம் 95,000 நாலறை வீடு­க­ளின் மின்­சா­ரத் தேவை­யைப் பூர்த்தி செய்­யும். இத்­திட்­டத்தை வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­க­ம், பொரு­ளி­யல் வளர்ச்சிக் கழ­கம் ஆகி­யவை முன்னெடுத்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!