சிங்கப்பூர் மாநாட்டில் பங்கேற்ற தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசு முறைப் பயணமாக திங்கள்கிழமை (நவம்பர் 7) சிங்கப்பூருக்கு வந்த தமிழக சுகாதார, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள அறுவை சிகிச்சை அரங்கத்தை பாா்வையிட்டாார்.

மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை செயலா் ப.செந்தில்குமார், பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், சிங்ஹெல்த் அனைத்துலக ஒத்துழைப்பு அலுவலக இயக்குநா் விஜயாராவ் ஆகியோா் உடன் இருந்தனா்.

அதன் பின்னா், இங்கு திங்கள்கிழமை தொடங்கிய 7வது உலக சுகாதார மாநாட்டில் (World One Health Congress) அமைச்சா் சுப்பிரமணியன் பங்கேற்றாா். மாநாட்டில் ‘நுண்ணுயிா் எதிா்ப்புப் பாதை-தென்கிழக்காசியாவில் தொற்றுநோய்கள் அச்சுறுத்தல்கள்’ எனும் தலைப்பில் அவர் உரையாற்றினார்.

இங்கும் அதிகாலையில் நடைப்பயிற்சி

இதனிடையே, தமிழகத்தில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் நாள்தோறும் அதிகாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுவரும் அமைச்சர் சுப்பிரமணியன், சிங்கப்பூரிலும் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, இவரைக் கண்ட பலரும் இவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!